இலங்கை மக்களுக்கு சேவை செய்ய தயார் – அதிமுக குழுவினர்

இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ள தமிழகத்தின் முன்னாள் செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜு தலைமையிலான அதிமுக குழுவினர், நேற்று (08) அமைச்சர் ஜீவன் தொண்டமானை சந்தித்துள்ளனர்.

இதன்போது எம்.ஜி.ஆர். அறக்கட்டளை மூலம் முன்னெடுக்கப்படும் பணிகள் தொடர்பில் அமைச்சரிடம் எடுத்துரைத்த அவர்கள், இலங்கை மக்களுக்கும் சேவை செய்ய தயாராக இருப்பதாக தமது விருப்பத்தை தெரிவித்துள்ளனர்.

இதற்கமைய இந்த குழுவினர் இன்றும், நாளையும், மலையக பகுதிகளுக்கு விஜயம் செய்து, மக்களுடன் கலந்துரையாடவுள்ளனர்.

இந்த குழுவினரால் மக்களுக்கான உதவி திட்டங்கள் முன்னெடுக்கும் பட்சத்தில் அதற்கான முழு ஒத்துழைப்பையும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் வழங்கும் என அமைச்சர் ஜீவன் தொண்டமான் தனது முகநூல் பக்க பதிவில் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.