இலாபமீட்டும் துறையாக கடற்றொழில் துறை மாறிவருகிறது – பிரதமர்

நஷ்டத்தில் இயங்கிவந்த கடற்றொழில் துறை இலாபமீட்டும் துறையாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் தொடர்ச்சியான முயற்சி காரணமாக மாற்றியமைக்கப்பட்டு வருவதாக பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் வழிநடத்தலில் செயற்பட்டு வருகின்ற சீநோர் நிறுவனத்தின் 55 ஆண்டு நிறைவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வு நேற்று (08) இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றிய போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

நோர்வே அரசாங்கத்தினால் ஸ்தாபிக்கப்பட்ட சீநோர் நிறுவனமானது மரத்தினாலான படகுகளையே நிர்மாணித்து வந்ததாகவும். தனது தந்தையான பிலிப் குணவர்த்தனவின் காலத்தில் அதனை மாற்றி பிளாஸ்டிக் படகுகளை கட்டுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவித்தார்.

ஐந்தாண்டு வேலைத்திட்டத்தில் நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி படகு கட்டுமானம் உட்பட சுற்றுலாத்துறை அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுக்க அரசு தேவையான ஒத்துழைப்பை வழங்கும் எனவும் பிரதமர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.