உலகின் காஸ்ட்லியான மாம்பழம்.. ஒன்று 40,000 ரூபாயாம்.. இந்த விலைக்கு என்ன காரணம்! டேஸ்ட் எப்படி

டோக்கியோ: ஜப்பானைச் சேர்ந்த விவசாயி ஒருவர் தனது பண்ணையில் உற்பத்தி செய்யும் மாம்பழம் ஒன்றை அதிகபட்சம் 40 ஆயிரம் ரூபாய்க்குக் கூட விற்பனை செய்து பரபரப்பைக் கிளப்பியுள்ளார்.

கோடைக் காலம் வந்துவிட்டது. பல இடங்களில் வெயிலின் தாக்கம் கணிசமாகவே இருக்கிறது. சில காலமாகவே மழை பெய்தாலும் கூட ஒட்டுமொத்தமாகப் பார்க்கும் போது கணிசமாக வெயில் இருந்தே வருகிறது.

அதேபோல கோடைக் காலத்திற்கான பழங்களின் விற்பனையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த சீசனில் மாம்பழங்களின் விற்பனையும் அதிகரித்துள்ளது. இப்போது மார்கெட்களில் மாம்பழங்களின் விற்பனையும் அதிகரித்துள்ளது.

ஜப்பான்: நம்ம ஊரில் மாம்பழம் இப்போது கிலோவுக்கு 80 ரூபாய் முதல் அதிகபட்சம் 200 வரை இருக்கும். ஆனால், இங்கே ஒருவர் ஒரு கிலோ மாம்பழத்தை 19 ஆயிரத்திற்கு விற்பனை செய்து வருகிறது. இத்தனை ஆயிரம் ரூபாய்க்கு மாம்பழத்தை விற்க அப்படி அதில் என்ன ஸ்பெஷல் இருக்கிறது என்பது குறித்துப் பார்க்கலாம். ஜப்பானில் தான் இந்த காஸ்ட்லி மாம்பழங்களை இந்த விவசாயி உற்பத்தி செய்துள்ளார்.

ஜப்பானின் ஹொக்கைடோ தீவில் உள்ள ஓட்டோஃபுக்கில் தான் இவர் இவ்வளவு காஸ்டிலி மாம்பழத்தை உற்பத்தி செய்துள்ளார். அங்கே வெளியே குளிர்ச்சியாக -8C வெப்பம் இருக்கிறது. ஆனால், உள்ளே மாம்பழ விவசாயத்திற்காக அவர்கள் 36 டிகிரியில் வெப்பத்தைப் பராமரித்து வருகிறார்.

20 ஆயிரம்: இந்த முறையின் கீழ் பனி படர்ந்த ஜப்பானின் ஹொக்கைடோ பகுதியில் 2011ஆம் ஆண்டு முதல் நககாவா என்பவர் மாம்பழங்களை வளர்த்து வருகிறார். இந்த மாம்பழம் ஒவ்வொன்றையும் அவர் $230 டாலர் அதாவது சுமார் 19 ஆயிரத்திற்கு விற்பனை செய்கிறார். சோதனை முயற்சியில் 2011இல் அவர் மாம்பழ விவசாயத்தைத் தொடங்கிய போது ஒரு நாள் உலகின் மிக விலையுயர்ந்த மாம்பழங்களை உற்பத்தி செய்வோம் என ஒரு நாளும் அவர் நினைத்திருக்க மாட்டார்.

இது குறித்து 62 வயதான நககாவா கூறுகையில், “முதலில் யாரும் என்னைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.. இங்கே இயற்கையான முறையில் மாம்பழத்தை உற்பத்தி செய்வதே எனது நோக்கம்” என்று அவர் தெரிவித்தார்.

பல ஆண்டுகளாக எண்ணெய் வியாபாரம் செய்து வந்த நகாகாவா, மாம்பழ சாகுபடிக்கு மாறினார்.. மற்றொரு மாம்பழ விவசாயியிடம் வழிகாட்டுதல்களைக் கேட்டு அவர் இந்த விவசாயத்தை ஆரம்பித்துள்ளார். ஜப்பானில் தனது பண்ணையை நடத்தி வந்த நாககாவா, சில ஆண்டுகளுக்குப் பிறகு, தனது மாம்பழத்தை ஹகுகின் என்று டிரேட் மார்கும் வாங்கியுள்ளார்.

How Japan Farmer Produces Worlds Most Expensive Mangoes At Nearly ₹ 19,000 Each

எப்படி செய்கிறார்: அங்கே இருக்கும் இரண்டு ரகசியங்கள் தான் அவரது மாம்பழத்தைச் சுவை மிக்கதாக மாற்றியுள்ளது. அங்கே இருக்கும் பனியும் வெப்ப நீரூற்றுகளும் தான் மாம்பழத்தை சுவை மிக்கதாக மாற்றியுள்ளது. குளிர் காலத்தில் கிடைக்கும் பனியைச் சேமிக்கும் அவர், கோடைக் காலத்தில் வெப்பத்தைத் தணிக்க அவர் அதனை பயன்படுத்திக் கொள்வாராம். அதேபோல குளிர்காலத்தில் அவர் இயற்கையான வெப்ப நீரூற்றுகளைப் பயன்படுத்தி விவசாயம் செய்யும் ரூமை சூடாக மாற்றுவாராம்.

இந்த முறையைப் பயன்படுத்தி அவர் ஒவ்வொரு சீசனிலும் 5,000 மாம்பழங்களை அறுவடை செய்கிறார். பொதுவாகக் குளிர் காலத்தில் பூச்சிகள் மட்டுமே இருக்கும். இதனால் அவர் குளிர் காலத்தில் மாம்பழங்களைப் பழுக்க வைக்கிறார். இதன் மூலம் பூச்சிக்கொல்லிகளையும் அவர் பயன்படுத்தத் தேவையில்லாத சூழல் உருவாகிறது.

அங்கே நிலவும் குறைந்த ஈரப்பதம் கொண்ட காலநிலை கெமிக்கல் பயன்பாட்டைக் கணிசமாகவே குறைக்கிறது. பொதுவாகக் குளிர் காலத்தில் விவசாயத் தொழிலாளர்களுக்கு வேலை குறைவாகவே இருக்கும். அந்த நேரத்தில் அங்கே கிராமப்புறங்களில் உள்ள தொழிலாளர்களுக்கு இவர் மாம்பழங்களைப் பறிக்கும் வேலையையும் தருகிறார். இதன் மூலம் அவர்கள் வாழ்வாதாரமும் மேம்படுகிறது.

40 ஆயிரம் ரூபாய்: இவை எல்லாம் சேர்ந்து அந்த மாம்பழங்களைச் சுவை மிக்கதாக மாற்றுகிறது. வழக்கமான சுவையைக் காட்டிலும் இவை மாம்பழங்களை மேலும் சுவை மிக்கதாக மாற்றுகிறது. இந்த மாம்பழங்கள் அருகே இருக்கும் உள்ளூர் கடைகளில் பிரஷாகவே விற்பனை செய்யப்படுகிறது.. சில நேரங்களில் ஒரு மாம்பழம் அதிகபட்சம் 400 டாலர் அதாவது 38 ஆயிரம் ரூபாய்க்குக் கூட விற்பனை செய்யப்பட்டுள்ளது.

விலை இவ்வளவு அதிகமாகச் சொல்வதால் மாம்பழங்கள் விற்பனை ஆகாது என்றெல்லாம் இல்லை. மின்னல் வேகத்தில் விற்பனையாகி விடுகிறதாம். சம்மரை தவிர்த்துவிட்டுக் குளிர் காலத்தில் விவசாயம் செய்வதால் தனக்கு இப்படிப் பல பலன்கள் கிடைப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதேபோல நம் ஊர் விவசாயிகளும் பெருந்தொகையை லாபமாகப் பெறலாம்.

Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.