டோக்கியோ, ஜப்பானைச் சேர்ந்த விவசாயி, தன் பண்ணையில் விளையும்மாம்பழம் ஒன்றை, 19 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்து வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
கிழக்காசிய நாடான ஜப்பானின், ஹொக்கைடோ தீவின் ஓட்டோபுக் என்ற பகுதியைச் சேர்ந்தவர் ஹிரோயுகி நககாவா, 62, மாம்பழ விவசாயியான இவர் 2011 முதல், தன் பண்ணையில் இயற்கை முறையில் மாம்பழத்தை விளைவித்து வருகிறார்.
இவரது மாம்பழங்களுக்கு, உள்நாடு போக வெளிநாட்டு சந்தையிலும் அதிக கிராக்கிஇருக்கிறது.
ஹிரோயுகி நககாவா, ஒரு மாம்பழத்தை, இந்திய ரூபாய் மதிப்பில், 19 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்து அசத்தி வருகிறார்.
இதுகுறித்து ஹிரோயுகி நககாவா கூறுகையில், ”முதலில் யாரும் என்னை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.
”இயற்கையான முறையில், தரமான மாம்பழங்களை உற்பத்தி செய்வதே என் நோக்கம்,” என்றார்.
என்ன ஸ்பெஷல்?
ஹிரோயுகி நககாவாவின் மாம்பழங்கள் சுவைமிக்கதாக இருப்பதற்கு, பனியும், வெப்ப நீரூற்றுகளும் தான் காரணம். குளிர் காலத்தில் கிடைக்கும் பனியைச் சேமிக்கும் இவர், கோடைக் காலத்தில் வெப்பத்தைத் தணிக்க பயன்படுத்துகிறார். இதே போல், குளிர் காலத்தில் அவர் இயற்கையான வெப்ப நீரூற்றுகளைப் பயன்படுத்தி விவசாயம் செய்யும் அறையை வெப்பமாக மாற்றுகிறார்.இந்த முறையைப் பயன்படுத்தி, ஹிரோயுகி நககாவா ஒவ்வொரு சீசனிலும் 5,000 மாம்பழங்களை மட்டுமே அறுவடை செய்கிறார். இதனால் அவரது பண்ணையில் விளையும் மாம்பழங்கள் தரமுடனும் சுவையுடனும் இருக்கிறது. மேலும், மாம்பழத்திற்கு ஹிரோயுகி நககாவா வர்த்தக முத்திரையையும் வாங்கி உள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement