புதுடில்லி : நடப்பு நிதி ஆண்டில், கடன் பத்திரங்கள் வாயிலாக, 5,000 கோடி ரூபாய் வரை நிதி திரட்ட, என்.எல்.சி., இந்தியா நிறுவனம் ஒப்புதல் அளித்துள்ளது.
மத்திய அரசுக்கு சொந்தமான என்.எல்.சி., நிறுவனம், நிலக்கரி அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்திற்கு, தமிழகத்தின் நெய்வேலியிலும், ராஜஸ்தானின் பார்சிங்சரியிலும் பழுப்பு நிலக்கரி சுரங்கம் உள்ளது.
மேலும், ஒடிசாவில் உள்ள தலாபிராவில், திறந்த வெளி நிலக்கரி சுரங்கம் உள்ளது. வெப்ப மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அடிப்படையிலான மின் உற்பத்தியிலும் இந்நிறுவனம் ஈடுபட்டுள்ளது.
இந்நிலையில், நடப்பு 2023 – 2024ம் நிதி ஆண்டில், கடன் பத்திரங்களை தவணை முறையில் வெளியிட்டு, 5,000 கோடி ரூபாய் நிதி திரட்ட, என்.எல்.சி., நிறுவனத்தின் இயக்குனர்கள் வாரியக் குழு நேற்று ஒப்புதல் அளித்துள்ளது.
மேலும், தற்போதுள்ள புதுப்பிக்கத்தக்க சொத்துகளை கையகப்படுத்த, துணை நிறுவனத்தை இணைப்பதற்கான பரிந்துரைக்கும் இந்தக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement