கர்நாடகா மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் வரும் மே 10ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதன் காரணமாக ஆளும் கட்சி பாஜக, எதிர்க்கட்சி காங்கிரஸ், ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் தீவிர பிரச்சாரம் செய்து வந்த நிலையில் இன்று மாலையுடன் பிரச்சாரம் முடிவடைந்தது.
இதனையடுத்து 224 தொகுதிகளிலும் இன்று மாலை 6 மணி முதல் வாக்குப்பதிவு நடைபெறும் மே 10ம் தேதி நள்ளிரவு 12 மணி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து கர்நாடகா மாநிலம் முழுவதும் இன்று மாலை முதல் மே 10ம் தேதி வரையும், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மே 13ஆம் தேதியும் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் கர்நாடகா தமிழ்நாடு எல்லையோரம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 12 டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்களை குறிப்பிட்ட நாட்களில் மூட மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் இந்த உத்தரவை மீறி கள்ளத்தனமாக மது விற்பனை செய்தால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.