சீன தூதரை வெளியேற உத்தரவிட்ட கனடா… பழிக்குப்பழி வாங்கிய சீனா


சீன தூதர் நாட்டைவிட்டு வெளியேற வேண்டியிருக்கும் என கனடா கூறியதைத் தொடர்ந்து, அதற்கு பழிக்குப் பழி வாங்கும் நடவடிக்கையாக, கனடா தூதரை சீனாவை விட்டு வெளியேறும்படி சீனா உத்தரவிட்டுள்ளது.

சீன தூதர் நாட்டைவிட்டு வெளியேற உத்தரவு

சீனாவை விமர்சித்த கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் மற்றும் ஹொங்ஹொங்கிலுள்ள அவரது குடும்பத்தினர் மீது தடைகள் விதிக்க சீனா திட்டமிட்டதைத் தொடர்ந்து, கனடாவை விட்டு வெளியேறும்படி கனடாவுக்கான சீன தூதருக்கு உத்தரவிடப்பட்டது.

சீன தூதரான Zhao Wei கனடாவை விட்டு வெளியேற வேண்டியிருக்கும் என கனேடிய வெளியுறவு அமைச்சரான Melanie Joly கூறியிருந்தார்.

சீன தூதரை வெளியேற உத்தரவிட்ட கனடா... பழிக்குப்பழி வாங்கிய சீனா | Canada Orders Chinese Ambassador To Leave

பழிக்குப் பழி நடவடிக்கை

அதற்கு பழிக்குப் பழி வாங்கும் நடவடிக்கையாக, சீனா, கனடா தூதரான Jennifer Lynn Lalondeவை இம்மாதம் 13ஆம் திகதிக்குள் சீனாவை விட்டு வெளியேறும்படி உத்தரவிட்டுள்ளது.

இந்த நடவடிக்கைகளைத் தொடர்ந்து இரு நாட்டு உறவுகளில் சற்றே விரிசல் ஏற்பட்டுள்ளது.  

சீன தூதரை வெளியேற உத்தரவிட்ட கனடா... பழிக்குப்பழி வாங்கிய சீனா | Canada Orders Chinese Ambassador To Leave



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.