ஜம்மு காஷ்மீருக்கு பிறகு, ராஜஸ்தானில் மிக அதிக அளவிலான லித்தியம் இருப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
நாட்டிலேயே முதல் முறையாக ஜம்மு – காஷ்மீரில் 59 லட்சம் டன் லித்தியம் இருப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக பிப்ரவரி மாதம் மத்திய அரசு தெரிவித்தது.
இந்நிலையில், இரு மாதங்களுக்குப் பிறகு, ராஜஸ்தானின் நாகௌர் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட லித்தியம் இருப்பு மூலம் நாட்டின் 80 சதவீத லித்தியம் தேவையை பூர்த்திசெய்ய முடியும் என்றும், இதன் மூலம் லித்தியத்திற்காக சீனாவை இந்தியா சார்ந்திருக்க வேண்டியதில்லை என்கின்றனர் புவியியல் வல்லுநர்கள்.
இரும்பு அல்லாத உலோகமான லித்தியம், மொபைல் போன், லேப்டாப், மின்சார வாகனங்கள் மற்றும் பிற சார்ஜ் செய்யக்கூடிய பேட்டரிகள் தயாரிப்பதில் பயன்படுத்தப்படுகிறது.