மனைவியை விவாகரத்து செய்த நபர் ஒருவர், மற்றும் அவருடைய மகனுடைய சுவிஸ் பாஸ்போர்ட்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
சுவிஸ் பெண்மணியை திருமணம் செய்த வெளிநாட்டவர்
துனிசியா நாட்டவரான அந்த நபர், தன்னைவிட 30 வயது மூத்த சுவிஸ் பெண்மணி ஒருவரைத் திருமணம் செய்துகொண்டுள்ளார்.
திருமணமாகி ஐந்து வருடங்களுக்குப் பின் அவர் சுவிஸ் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்தார், அவருக்கு பாஸ்போர்ட்டும் கிடைத்துவிட்டது.
தம்பதியர் தாங்கள் இணைந்து வாழ்வோம் என்று உறுதியளித்ததுடன், விவாகரத்து செய்யும் எண்ணமும் தங்களுக்கு இல்லை என்று அதிகாரிகளிடம் கூறியிருந்தனர்.
ஆனால், பாஸ்போர்ட் கிடைத்த ஒரே ஆண்டில் தம்பதியர் பிரிந்துவிட்டனர்.
அதிகாரிகளுக்கு ஏற்பட்ட சந்தேகம்
இந்நிலையில், அந்த துனிசியா நாட்டவர், தன் நாட்டவரான ஒரு இளம்பெணை சந்தித்திருக்கிறார். இருவரும் நெருங்கிப் பழகியிருக்கிறார்கள், அந்தப் பெண் கர்ப்பமாகியிருக்கிறார். அவருக்கு ஒரு மகன் பிறக்க, சுவிஸ் பாஸ்போர்ட் வைத்திருப்பவரின் மகன் என்பதால், அந்த ஆண் குழந்தைக்கும் சுவிஸ் பாஸ்போர்ட் வழங்கப்பட்டுள்ளது.
ஆனால், அந்த துனிசியா நாட்டவர் அந்த சுவிஸ் பெண்ணுடன் செய்துகொண்ட திருமணம் மோசடியானது என தீர்மானித்த புலம்பெயர்தல் நீதிமன்றம் ஒன்று, அவர் மற்றும் அவருடைய மகன் ஆகிய இருவருடைய பாஸ்போர்ட்களையும் ரத்து செய்துவிட்டதால் அந்தக் குடும்பம் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது.