ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தமிழக முதல்வர்
பரிந்துரையை ஏற்று மன்னார்குடி எம்.எல்.ஏ டி.ஆர்.பி.ராஜா அமைச்சரவையில் சேர்க்கப்படுகிறார். இவரது பதவியேற்பு விழா வரும் மே 11 அன்று காலை 10.30 மணிக்கு நடைபெறும். மேலும் அமைச்சரவையில் பால்வளத்துறை அமைச்சர் எஸ்.எம்.நாசரை விடுவிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.