திமுக அமைச்சர் சேகர்பாபுவின் மருமகன் அதிரடி கைது..யார் அந்த பெண்? \"பாலியல் சேட்டை\"..திடீர் பரபரப்பு

சென்னை: பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த அமைச்சர் சேகர்பாபுவின் மருமகன் கைது செய்யப்பட்டுள்ளார். இது மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக பதவி வகித்து வருபவர் சேகர்பாபு… இவரது மகள் ஜெயகல்யாணி.. மருமகன் பெயர் சதீஷ்குமார்..

கடந்த 2022ம் ஆண்டு மார்ச் மாதம் இவர்கள் காதலித்து திருமணம் செய்துக் கொண்டார்கள்.. திருமணம் முடித்த கையோடு, பெங்களூரு சென்ற இந்த தம்பதியினர், அங்கிருந்த காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தஞ்சம் அடைந்தனர்..

அத்துடன், தன்னுடைய தந்தையிடம் இருந்து பாதுகாப்புக்கோரினார் ஜெயகல்யாணி.. இது தொடர்பாக புகார் ஒன்றையும் தந்திருந்தார்.. அந்த புகாரில், பெற்றோர்கள் எதிர்ப்பை மீறி சதீஷ்குமாரை பல ஆண்டுகளாக காதலித்ததாக தெரிவித்திருந்தார். இதற்கு பிறகு, சில மாதங்களுக்கு முன்பு, வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார் ஜெயகல்யாணி..

வீடியோ பகீர்: அதில், “நான் என்னுடைய முழு விருப்பத்துடன் வெளியே வந்து காதலனை கரம்பிடித்தபோது, எங்களை புனேவில் கண்டறிந்து எங்களை பிரித்து இருந்தனர். பிறகு, சதீஷின் தந்தை ஆட்கொணர்வு மனுதாக்கல் செய்ததால் 2 மாதம் கழித்து கணவரை கண்ணில் காண்பித்தனர்.
தலைமறைவு: என்னுடைய கணவரின் முன்னாள் காதலிக்கு திருமணம் ஆகி குழந்தை இருக்கும் நிலையில், எனது அப்பாவின் ஆதரவாளர்கள் அந்த பெண்ணை வைத்து எனது கணவருக்கு எதிராக புகார் தர வைக்கின்றனர். என்னுடைய கணவரை ஏதேனும் செய்துவிடுவார்கள் என்ற பயத்தில் நாங்கள் தலைமறைவாக இருக்கிறோம். நாங்கள் பதிவு திருமணமும் செய்துகொண்டுள்ளோம். எனது கணவரின் மீது பல்வேறு குற்றவழக்குகளை போலியாக பதிவு செய்துள்ளார்கள்.

Minister sekarbabus son in law arrested due to cheating woman and assaulting case issue

என்னுடைய கணவரின் அப்பா, மாற்றுத்திறனாளியாக இருக்கும் நிலையில், அவரின் மீதும் வழக்குப்பதிவு செய்தார்கள். நாங்கள் நீதிமன்றம் சென்று வாதாடி வெற்றிபெற்றோம். நாங்கள் சென்னை வந்தால் உயிர்க்கு ஆபத்து.. அதனால், சென்னையில் கோர்ட்டுக்கு வரக்கூட பயமாக உள்ளது. என்னுடைய கணவரை கோர்ட்டில் சரணடைய வைத்தால் லாக்கப் டெத் செய்துவிடுவார்களோ என்று பயமாக உள்ளது. தமிழகத்தில் லாக்கப் டெத் அதிகரித்துவிட்டது.

மாற்று திறனாளி: ஒருவேளை எங்களுக்கோ, என்னுடைய குழந்தைக்கோ, கணவருக்கோ ஆபத்து ஏற்பட்டால் அதற்கு முழு பொறுப்பு, என் அப்பா அமைச்சர் சேகர்பாபு, காவலர்கள் ஜானி செல்லப்பா, கிருஷ்ணமூர்த்தி, தாய்மாமா யுவராஜ் ஆகியோர்களே முழு பொறுப்பு ஆவார்கள்.. நாங்கள் கோர்ட்டில் வழக்கை சந்திக்க தயாராக இருக்கிறோம். கடந்த 10 மாதத்தில் 3 போலி புகார்கள் என்னுடைய கணவரின் மீது பதிவு செய்துள்ளனர். தமிழ்நாட்டில் அப்பா, முதல்வருடன் நெருங்கிய தொடர்பில் இருப்பதால் போலீசாரும் அவர்களுக்கே சாதகமாக இருக்கிறார்கள்” என்று பேசியிருந்தார்.

எங்கிருந்தாலும் வாழ்க: இதனிடையே, ஒரு டிவி சேனலுக்கு அமைச்சர் சேகர்பாபு ஒரு பேட்டி தந்திருந்தார்.. அதில், “ஒரு தகப்பனுக்கு இருக்கின்ற ஒரு முக்கிய கடமை என்னவென்றால், தன்னுடைய மகளுக்கு ஒரு பாதுகாப்பான வாழ்க்கையை அமைத்துத் தர வேண்டும். அவர்கள் தேர்ந்தெடுக்கின்ற முடிவு என்பது அவர்கள் வாழ்க்கைக்கு பாதுகாப்பாக இருக்காது என்பதை அறிவுறுத்தி வந்தோம். ஆனால், அவர்கள் அந்த முடிவுதான் சரி என்று ஏற்றுக்கொள்கின்றபோது, நம்முடைய முடிவை நாம் மாற்றிக் கொள்கிறோம். அவர்கள் எங்கிருந்தாலும் வாழ்க அவ்வளவுதான்” என்று கூறியிருந்தார்.

முதலமைச்சர் ஸ்டாலின் உத்திரவாதம் அளித்தால், தாங்கள் தமிழ்நாட்டு வருவதாக அந்த வீடியோவில் அவர் பதிவு செய்திருந்த நிலையில், அப்போது இதெல்லாம் மிகுந்த பரபரப்பை அன்றைய தினம் கிளப்பியிருந்தது..

Minister sekarbabus son in law arrested due to cheating woman and assaulting case issue

பாலியல் புகார்: இந்த நிலையில் பெண்ணை மிரட்டிய வழக்கில் அமைச்சர் சேகர்பாபு மருமகன் சதீஷை சென்னை புளியந்தோப்பு போலீசார் கைது செய்துள்ளனர். கடந்த 2018 ஆண்டு புளியந்தோப்பு அனைத்து மகளிர் போலீசில் திருமணம் செய்து கொள்ளுவதாக கூறி ஏமாற்றியதாக சேகர்பாபு மருமகன் மீது பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்திருக்கிறார்.. இந்த புகாரின் வழக்குப்பதிவு செய்யப்பட்டு சதீஷ் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை ஓட்டேரி கொசப்பேட்டை எட்வர்ட் பார்க் பகுதியை சேர்ந்தவர் இந்த சதீஷ்குமார்.. 29 வயதாகிறது.. சதீஷ் மீது கொலை மிரட்டல், ஆபாசமாக பேசுதல், பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் ஏற்கனவே உள்ளன.. .

பரபரப்பு: கடந்த 2016-ம் ஆண்டு சதீஷ்குமார் அதேபகுதியை சேர்ந்த 23 வயது பெண் ஒருவரை திருமணம் செய்து கொள்வதாக கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.. அது தொடர்பான புகாரில், கடந்த 2018-ம் ஆண்டு, சதீஷை போலீசார் கைது செய்திருந்தனர்.. பிறகு, 2018-ம் ஆண்டு நவம்பர் மாதம் ஜாமீனில் வெளியே வந்த சதீஷ், பிறகு முறையாக நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்தார்… இதனால் அல்லிக்குளம் நீதிமன்றம் சமீபத்தில் சதீஷ் குமாருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டது.

இந்தநிலையில் பூந்தமல்லி செந்நீர்குப்பம் பகுதியில் தலைமறைவாக இருந்து வந்த சதீஷ்குமாரை இன்று புளியந்தோப்பு மகளிர் போலீஸார் கைது செய்தனர். அவரை அல்லிக்குளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் நடவடிக்கையில் போலீஸார் ஈடுபட்டு உள்ளனர். சேகர்பாபுவின் மருமகன் கைதாகி உள்ள சம்பவம், இந்த சம்பவம் மிகுந்த பரபரப்பை கிளப்பிவிட்டு வருகிறது.

Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.