பிரித்தானிய கவுன்சில் தேர்தல்: கேரளாவை சேர்ந்த 18 வயதுடைய இளம் பெண் வெற்றி


பிரித்தானியாவில் நடைபெற்ற கவுன்சில் தேர்தலில் கேரளாவை சேர்ந்த இளம்பெண் ஒருவர் வெற்றி பெற்றுள்ளார்.

தேர்தலில் வெற்றி பெற்ற இளம் பெண்

அலீனா டாம் ஆதித்யா(Aleena Aditya) என்ற 18 வயதுடைய கேரளாவை சேர்ந்த இளம் பெண் பிரித்தானியாவில் நடைபெற்ற உள்ளூர் கவுன்சில் தேர்தலில் முதல் முறையாக போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.

 
அலீனா டாம் ஆதித்யா கன்சர்வேட்டிவ் கட்சிக்காக தெற்கு க்ளௌசெஸ்டர்ஷையரில் உள்ள பிராட்லி ஸ்டோக் (Bradley Stoke in South Gloucestershire) தொகுதியில் போட்டியிட்டு இந்த வெற்றியை பெற்றுள்ளார்.

Aleena Aditya-அலீனா அதித்யாAleena Aditya(onmanorama)

மேலும் இவர் கவுன்சில் உள்ள உறுப்பினர்களில் மிகவும் இளம் கவுன்சிலர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.
இவர் கன்சர்வேட்டிவ்-களுக்காக பெற்ற இந்த வெற்றியில் இரண்டு முன்னாள் மேயர்களை வீழ்த்தியுள்ளார்.

அலீனா, பிரிஸ்டலில் உள்ள  செயிண்ட் பேட்ஸ் கத்தோலிக்க பாடசாலையில் பயின்ற நிலையில், அடுத்ததாக கட்டிடக்கலை படிப்பதற்காக கார்டிஃப் பல்கலைக்கழகத்தில் சேர விரும்புகிறார்.

அலீனாவின் தந்தை டாம் ஆதித்யா இந்தியாவின் கேரள மாநிலம் பத்தினம்திட்டா மாவட்டத்தில் உள்ள ரன்னி பகுதியை பூர்விகமாக கொண்டவர், இவரும் பிராட்லி ஸ்டோக் பகுதியில் இரண்டு முறை மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டு சேவை செய்துள்ளார். அலீனாவின் தாயார் லினி ஆதித்யா ஆவார்.

மேலும் இருவர் வெற்றி

அலீனா-வை தொடர்ந்து, கேரளாவை சேர்ந்த மேலும் இரண்டு பேர் பிரித்தானிய கவுன்சில் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளனர்.

சோஜன் ஜோசப் மற்றும் பிபின் பேபி என்ற கேரளாவை சேர்ந்த இரண்டு பேர் தொழிலாளர் கட்சிக்காக போட்டியிட்டு ஆஷ்ஃபோர்ட் பரோ மற்றும் நோர்போக் கவுண்டி ஆகிய பகுதிகளில் வெற்றி பெற்றுள்ளனர். 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.