பீகார் மாநிலம் பாட்னாவில் இருந்து, ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சிக்கு, இம்மாத இறுதியில் வந்தே பாரத் ரயில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இரு மாநிலங்களின் தலைநகரையும் இணைக்கும் விதமாக இயக்கப்படவுள்ள இந்த ரயில், இரு ரயில் நிலையங்களுக்கு இடையேயுள்ள தூரத்தை 6 மணி நேரத்தில் கடக்கும் என எதிர்பாக்கப்படுகிறது.
தற்போது பாட்னா – ராஞ்சி வழித்தடத்தில் இயக்கப்படும், ‘ஜன் சதாப்தி’ என்ற விரைவு ரயில் 7 மணிநேரம், 55 நிமிடங்களில் இந்த வழித்தடத்தை கடந்து செல்கிறது.
பாட்னா- ராஞ்சி வந்தேபாரத் ரயிலை பிரதமர் மோடி தொடங்கி வைப்பார் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.