மணிப்பூர் மாநிலத்தில் நடைபெற்றுவரும் இனக்கலவரத்தால் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் அசாதாரண சூழல் நிலவி வருகிறது. பழங்குடியினருக்கும் பழங்குடியினர் அல்லாதோருக்கும் இடையே ஏற்பட்டுள்ள மோதலில் உயிரிழப்பு, வீடுகள் தீக்கிரை, கடைகள் சூறையாடல் என தொடர்ந்து வருகிறது. இந்த நிலையில் இங்குள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த மருத்துவ மற்றும் இதர மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பை உறுதிசெய்ய அதிகாரிகளுக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக மறுவாழ்வுத் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ள முதலமைச்சர் தமிழ்நாடு திரும்ப விரும்பும் மாணவர்களுக்கு […]