மணிப்பூரில் வெடித்த கலவரம்: 1700 வீடுகள் தீயிட்டு எரிப்பு, 60 பேருக்கு மேல் உயிரிழப்பு


 மணிப்பூரில் இரண்டு பிரிவினரிடையே ஏற்பட்ட வன்முறையில், 60 பேருக்கு மேல் உயிரிழந்திருப்பதாக அம்மாநில முதல்வர் பிரேன் சிங் தெரிவித்துள்ளார்.

மணிப்பூரில் வன்முறை

மணிப்பூர் மாநிலத்தின் இட ஒதுக்கீடு தொடர்பாக. மொய்தி சமூகத்தினருக்கும், குகி மலைவாழ் மக்களுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

மணிப்பூரில் வெடித்த கலவரம்: 1700 வீடுகள் தீயிட்டு எரிப்பு, 60 பேருக்கு மேல் உயிரிழப்பு@twitter

இதனை தொடர்ந்து தேவாலயங்கள் தீ வைக்கப்படுவதும், வீடுகள் எரிக்கப்படுவதுமாக தொடர் வன்முறைகள் வெடித்தன.

மணிப்பூரில் வெடித்த கலவரம்: 1700 வீடுகள் தீயிட்டு எரிப்பு, 60 பேருக்கு மேல் உயிரிழப்பு@pti

இந்திய ராணுவம் அம்மாநிலத்தில் இறங்கி கலவரத்தை தற்போது ஓரளவிற்கு கட்டுப்படுத்தப்பட்டது.

மேலும் வன்முறை காரணமாக அம்மாநிலம் முழுதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

60 பேர் உயிரிழப்பு

இந்த வன்முறையில் 60 பேர் உயிரிழந்திருப்பதாகவும், 231 பேர் காயமடைந்திருப்பதாகவும் அம்மாநிலத்தின் முதல்வர் பிரேன் சிங் அறிவித்துள்ளார்.

மணிப்பூரில் வெடித்த கலவரம்: 1700 வீடுகள் தீயிட்டு எரிப்பு, 60 பேருக்கு மேல் உயிரிழப்பு@pti

மேலும் கலவரத்தில் 1700 வீடுகள் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளதால், மக்கள் தங்குவதற்கு இடமில்லாமல் தவிப்பதாக கூறியுள்ளார்.

இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு, தலா 5 லட்சம் நிதி உதவி அளிக்கப்படும் என மணிப்பூர் முதல்வர் தெரிவித்துள்ளார்.

மணிப்பூரில் வெடித்த கலவரம்: 1700 வீடுகள் தீயிட்டு எரிப்பு, 60 பேருக்கு மேல் உயிரிழப்பு@pti

இருப்பினும், தங்கள் வாழ்விடங்களை இழந்த மக்கள் உணவு போன்ற அடிப்படை பிரச்சனைகளுக்கு, நிறைய கடினமான சூழலை சந்திக்க வேண்டியிருக்கிறது என தெரிய வந்துள்ளது.       



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.