மத்திய பிரதேசத்தின் கர்கோன் மாவட்டத்தில், பாலத்திலிருந்து பயணிகள் பேருந்து கவிழ்ந்த விபத்தில் மூன்று குழந்தைகள் உட்பட 22 பேர் உயிரிழந்தனர்.
இந்தூர் நோக்கி சென்ற பேருந்து டோங்கர்கான் பகுதி அருகே போரத் ஆற்றுப் பாலத் தடுப்புகளை உடைத்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 22 பேர் உயிரிழந்த நிலையில், 31 பேர் காயமடைந்தனர். விசாரணையில் ஓட்டுநர் கண் அயர்ந்ததால், பேருந்து கட்டுப்பாட்டை இழந்து விபத்து நேர்ந்திருக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி மற்றும் மத்தியபிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு மாநில அரசு சார்பில் 4 லட்ச ரூபாயும், பிரதமரின் நிவாரண நிதியிலிருந்து 2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாயும் நிதி உதவியாக அறிவிக்கப்பட்டுள்ளது.