மத்திய பிரதேசத்தில் பயணிகள் பேருந்து பாலத்தில் இருந்து தலைக்குப்புற கவிழ்ந்து விபத்து – 23 பேர் பலி..!

மத்திய பிரதேசத்தில் ஆற்றுப் பாலம் ஒன்றின் மேலிருந்து பயணிகள் பேருந்து தலைக்குப்புற கவிழ்ந்ததில் மூன்று குழந்தைகள், 10 பெண்கள் உட்பட 23 பேர் உயிரிழந்தனர்.

30 பேர் காயமடைந்துள்ளனர். கர்கோன் மாவட்டத்தில் போரத் ஆற்றுப் பாலத்தின் மீது சென்ற போது, அப்பேருந்து தடுப்புச் சுவர்களை உடைத்துக் கொண்டு கீழே பாய்ந்தது.

ஓட்டுநர் கண் அயர்ந்ததால் கட்டுப்பாட்டை இழந்து இந்த விபத்து நேர்ந்திருக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

விபத்தை ஏற்படுத்திய ஓட்டுநர் சம்பவ இடத்தில் இருந்து தப்பி ஓடி தலைமறைவாகி விட்டதாகவும் அவரை தேடி வருவதாகவும் போலீசார் கூறியுள்ளனர். விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு மாநில அரசு சார்பில் 4 லட்ச ரூபாயும், பிரதமரின் நிவாரண நிதியிலிருந்து 2 லட்சமும் நிதி உதவியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.