வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
மாஸ்கோ: உக்ரைன், மேற்கத்திய நாடுகளின் பிணைக்கைதியாக மாறியுள்ளது என ரஷ்ய அதிபர் புடின் கூறியுள்ளார்.
கடந்த ஓராண்டுக்கும் மேலாக உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு உக்ரைனும் பதிலடி கொடுத்து வருகிறது. உக்ரைனுக்கு அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட பல நாடுகள் ஆதரவு கொடுத்து வருகின்றன. இந்த மோதல் காரணமாக இரு நாடுகளுக்கும் இழப்பு ஏற்பட்டு உள்ளது.
இந்நிலையில், ரஷ்யா தலைநகர் மாஸ்கோவில் உள்ள செஞ்சதுக்கத்தில் ஆண்டுதோறும் நடக்கும் வெற்றி தினஅணிவகுப்பு நடந்தது.
இந்த விழாவில் அதிபர் விளாடிமிர் புடின் பேசியதாவது: தற்போது நடக்கும் போர் திணிக்கப்பட்டது. ரஷ்யாவிற்கு எதிராக மேற்கத்திய நாடுகள் மோதலை தூண்டி விடுகின்றன. அதனை நாங்கள் உறுதியுடன் எதிர்கொண்டு வருகிறோம். நமது தாய்மண்ணையும், டான்பாஸ் மக்களையும் பாதுகாத்து வருகிறோம்.
அந்த நாடுகள், எங்களுக்கு எதிராக வெறுப்புணர்வை தூண்டிவிடுகின்றன. ‛ரஷ்யாபோபியா’வால் அவை பாதிக்கப்பட்டு உள்ளன. மேற்கத்திய நாடுகளின் பிணைக்கைதியாக உக்ரைன் மாறி உள்ளது. அமைதியான எதிர்காலத்தையே ரஷ்யா விரும்புகிறது. ஆனால், நம்மை அழிப்பதே, நமது எதிரிகளின் நோக்கமாக உள்ளது. இவ்வாறு புடின் பேசினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement