கர்நாடக மாநிலத்தில் நாளை சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
224 தொகுதிகளை கொண்ட அம்மாநிலத்தில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது. அதற்காக, வாக்கு இயந்திரங்களை வாக்குச்சாவடி மையங்களுக்கு பிரித்து அனுப்பும் பணி மும்முரமாக நடைபெறுகிறது.
கர்நாடகாவில் பாஜக, காங்கிரஸ், மஜத இடையே மும்முனைப் போட்டி நிலவும் நிலையில், சுயேட்சைகள் உட்பட மொத்தம் 2,613 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
வாக்குப்பதிவிற்காக அமைக்கப்பட்டுள்ள 58,200 வாக்குச்சாவடி மையங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நாளை பதிவாகும் வாக்குகள் வரும் 13ஆம் தேதியன்று எண்ணப்பட உள்ளன.