சென்னை: ஓம் ராவத் இயக்கத்தில் பிரபாஸ், கிருத்தி சனோன், சைஃப் அலி கான் உள்ளிட்ட பலர் நடிப்பில் ராமாயண கதையாக உருவாகி உள்ள ஆதிபுருஷ் படத்தின் புதிய ட்ரெய்லர் வெளியாகி உள்ளது.
இந்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என்கிற அறிவிப்புடன் ஏற்கனவே வெளியான டீசரை பார்த்த ரசிகர்கள் பலரும் பயங்கரமாக ட்ரோல் செய்த நிலையில், படத்தின் ரிலீஸையே நிறுத்தி விட்டனர்.
ரசிகர்களுக்காக முதன் முறையாக தரமான சிஜி வொர்க் செய்து செம ரியாலிட்டியாக படத்தைக் கொடுக்க பெருமுயற்சியை ஆதிபுருஷ் டீம் மேற்கொண்டிருப்பதை தற்போது வெளியாகி உள்ள ட்ரெய்லரை பார்த்தாலே சொல்ல முடிகிறது.
ராமராக ராஜ்ஜியம் நடத்தும் பிரபாஸ்: ராமாயணக் கதையை பிரம்மாண்டமான படமாக உருவாக்க இயக்குநர் ஆதிபுருஷ் முடிவெடுத்த நிலையில், கோச்சடையான் படம் போல லைவ் அனிமேஷன் முறையில் இந்த படத்தை உருவாக்கினார்.
இதில், ராமராக பிரபாஸ் நடித்திருந்தார். சீதையாக கிருத்தி சனோனும் ராவணனாக சைஃப் அலி கானும் நடித்துள்ளனர். மீசை வைத்த ராமராக நடிகர் பிரபாஸ் இந்த ஆதிபுருஷ் படத்தில் அனிமேஷனா ரியலாகவே நடித்துள்ளாரா? என்கிற அளவுக்கு அவ்வளவு கச்சிதமாக புதிய சிஜி வொர்க் மேம்படுத்தப்பட்டு இருக்கிறது.
ட்ரோல்களால் மாறிய கிளாரிட்டி: கடும் விமர்சனங்களும் மரண ட்ரோல்களும் குவிந்தாலும் எடுத்த படத்தை அப்படியே வெளியிட்டு ரசிகர்களின் பணத்தை சில பிரபல நடிகர்கள் பறிப்பது போல் அல்லாமல், தனது ரசிகர்கள் எதிர்பார்க்கும் ஒரு படத்தை கொடுக்க வேண்டும் என நடிகர் பிரபாஸ் ஆதிபுருஷ் ரிலீஸையே நிறுத்தி விட்டார்.
தயாரிப்பு தரப்பிடம் பேசி மேலும், 100 கோடி செலவில் பிரம்மாண்டமாக ஆதிபுருஷ் படம் உருவாகி உள்ளது. முந்தைய டீசரையும் தற்போது வெளியாகி உ ள்ள ட்ரெய்லரையும் பார்த்தால் வேறலெவல் கிளாரிட்டியாக உள்ளது என்றும் ஹாலிவுட் படங்களுக்கு நிகரான உழைப்பை போட்டுள்ளனர். நடிகர் பிரபாஸ், கிருத்தி சனோன் மற்றும் சைஃப் அலி கானின் கதாபாத்திரங்கள் செம ரியாலிட்டியாக உள்ளன.
வரும் ஜூன் மாதம் ஆதிபுருஷ் படம் தியேட்டரில் வெளியாக உள்ள நிலையில், மிகப்பெரிய வெற்றியை பெறுமா? அல்லது இந்த படத்தை ரசிகர்கள் அனிமேஷன் படம் என்கிற ரீதியிலேயே ட்ரீட் செய்வார்களா? என்பதை வெயிட் பண்ணிப் பார்ப்போம்!