இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள்
அஜித் துணிவு படத்தின் வெற்றிக்கு பிறகு விடாமுயற்சி என்ற படத்தில் நடிக்க இருக்கின்றார். பல இழுபறி மற்றும் சர்ச்சைகளுக்கு பிறகு ஒருவழியாக மகிழ் திருமேனியை தன் அடுத்த பட இயக்குனராக ஒப்பந்தம் செய்தார் அஜித். தற்போது முழு கதையையும் தயார் செய்துவிட்டு நடிகர்களின் தேர்வை விறுவிறுப்பாக நடத்தி வருகின்றார் மகிழ் திருமேனி.
இப்படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பிற்காக அஜித் ரசிகர்கள் கடந்த ஐந்து மாத காலமாக காத்துக்கொண்டிருந்தனர். ஒருவழியாக அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு விடாமுயற்சி படத்தின் டைட்டில் மற்றும் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி அஜித் ரசிகர்களை படக்குழு உற்சாகப்படுத்தியது.
Lal Salaam: லால் சலாம் படத்தின் கதை இதுதானா ? செம மாஸா இருக்கும் போலயே..!
இதையடுத்து மே மாதம் இறுதியில் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்நிலையில் தற்போது மேலும் ஒரு செய்தி வெளியாகி அஜித் ரசிகர்களை குஷியில் ஆழ்த்தியுள்ளது.
அண்மைசெய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் சமயம் தமிழ் இணையத்தளத்தி பின் தொடரவும்
அதாவது அஜித் பைக்கில் உலகம் முழுக்க சுற்றுலா செய்யப்போகிறார் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. துணிவு படத்தின் படப்பிடிப்பின் போதே இடையில் அஜித் பைக்கை எடுத்துக்கொண்டு சுற்றுலா சென்று வந்தார். இதைத்தொடர்ந்து விடாமுயற்சி படம் முடிந்தவுடன் ஒன்றரை ஆண்டுகள் உலகம் முழுக்க பைக்கில் சுற்றுலா செய்வதாக அஜித் முடிவெடுத்தார்.
இந்நிலையில் தற்போது அஜித்தின் PRO சுரேஷ் சந்திரா வெளியிட்ட அறிக்கையில், அஜித் இந்தியா முழுவதும் உள்ள மாநிலங்களை பைக்கில் சுற்றுலா செய்து முடித்துவிட்டதாகவும், அடுத்தகட்ட வேர்ல்ட் டூர் நவம்பர் மாதம் துவங்கும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
பல கஷ்டமான சூழ்நிலைகளையும், கடுமையான வானிலைகளையும் தாண்டி அஜித் வெற்றிகரமாக இந்திய முழுவதும் உள்ள மாநிலங்களையும் மற்றும் நேபால் நாட்டையும் சுற்றிவந்து விட்டார். இதையடுத்து அடுத்தகட்ட வேர்ல்ட் டூர் நவம்பர் மாதம் துவங்கும் என தெரிவித்தார் சுரேஷ் சந்திரா.
இந்த செய்தியை அடுத்து விடாமுயற்சியின் படப்பிடிப்பை அஜித் நவம்பர் மாதத்திற்குள் முடித்துவிட்டு வேர்ல்ட் டூர் கிளம்பிவிடுவார் என தெரிகின்றது. எனவே விடாமுயற்சி திரைப்படம் அடுத்தாண்டு துவக்கத்திலேயே வெளிவர வாய்ப்புள்ளதாக எண்ணி அஜித் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். மேலும் அஜித் தன் ஒளிர்ட் டூரின் அடுத்தகட்டத்தை அடைந்ததற்காக அவருக்கு வாழ்த்துக்களையும் கூறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.