தமிழக அமைச்சர் சேகர்பாபுவின் மருமகன் சதீஷை, சென்னை பொழிந்தோப்பு காவல்துறையினர் சற்று முன்பு கைது செய்துள்ளனர்.
பெண் ஒருவரை மிரட்டிய புகாரின் பேரில் தற்போது அமைச்சரின் மருமகன் சதீஷை போலீசார் கைது செய்துள்ளனர்.
அமைச்சர் சேகர்பாபு மருமகன் சதிஷ் கைது!#DMK #Minister #SekarBabu #Chennai #Tamilnadu pic.twitter.com/uATSSYaL8n
— Seithi Punal (@seithipunal) May 9, 2023
காதலித்துவிட்டு திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றியதாக அமைச்சர் சேகர்பாபுவின் மருமகன் சதீஷ் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு இருந்தது.
கடந்த 2018 ஆம் ஆண்டு அளித்த புகாரியில் புகாரின் மீது, வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட நிலையில், அமைச்சர் மருமகன் சதீஷ் போலீசார் கைது செய்துள்ளனர்.
சேகர் பாபுவின் மகளை காதலித்து திருமணம் செய்து கொண்ட சதீஷ், தான் ஒரு பட்டியல் இன சமுதாயத்தை சேர்ந்தவர் என்பதால், அமைச்சர் எங்களை பிரிக்க பார்ப்பதாகவும், பொய் வழக்கில் என்னை கைது செய்ய அமைச்சர் சேகர்பாபு நடவடிக்கை எடுத்து வருவதாக ஏற்கனவே சதீஷ் பேட்டி அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் அமைச்சர் சேகர்பாபுவின் மகள், எனது தந்தை நிம்மதியாக வாழ விடமாட்டுகிறார் என்ற ஒரு குற்றச்சாட்டையும் அமைச்சர் சேகர் பாபு மீது முன் வைத்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.