இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் பெங்களூருவுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்றுள்ள மும்பை அணி பவுலிங்கை தேர்வு செய்துள்ளது. இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி பாயின்ட்ஸ் டேபிளில் 3 ஆவது இடத்திற்கு முன்னேறும் என்பதால் ரசிகர்கள் மத்தியில் இந்த போட்டி மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரு தொடக்க வீரர்களாக கேப்டன் டு பிளசிஸ், விராட் கோலி களமிறங்கினர். 4 பந்தில் 1 ரன் எடுத்திருந்த விராட் கோலி முதல் ஓவரிலேயே அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார்.இறுதியில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 199 ரன்கள் குவித்தது. இதையடுத்து, 200 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை களமிறங்க உள்ளது.
200 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்தி களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ரோஹித் சர்மா 7 ரன்னில் விக்கெட்டை இழந்து ஏமாற்றம் கொடுத்தாலும், மற்றொரு துவக்க வீரரான இஷான் கிஷன் 21 பந்துகளில் 42 ரன்கள் எடுத்து கொடுத்தார்.
அதன்பின் களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் 35 பந்துகளில் 83 ரன்களும், நேஹல் வதோரா 34 பந்துகளில் 52 ரன்களும் எடுத்து கொடுத்ததன் மூலம் 16.3 ஓவரிலேயே இலக்கை இலகுவாக எட்டிய மும்பை இந்தியன்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.