Google நிறுவனம் மே 10இல் வெளியிடும் முக்கிய சில விஷயங்கள்! புதிய செயற்கை தொழில்நுட்பம்!

இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள்
முன்னணி டெக் நிறுவனமாக இருக்கக்கூடிய Google அதன் Google IO 2023 நிகழ்ச்சியில் புதிதாக பல விஷயங்களை அறிமுகம் செய்யவுள்ளது. இந்த நிகழ்ச்சியில் முக்கியமாக Android 14 மற்றும் Google நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு கருவிகளாக இருக்கக்கூடிய Google Bard வெளியாகவுள்ளது. இந்த நிகழ்ச்சி வரும் மே 10 இரவு 10.30 மணிக்கு நடைபெறவுள்ளது.

Google Pixel 7aஇந்தியாவில் பட்ஜெட் செக்மென்ட்டில் இந்த Pixel 7a ஸ்மார்ட்போன் Flipkart மூலமாக வரும் மே 11 முதல் விற்பனையாகவுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் பார்ப்பதற்கு Pixel 7 போலவே இருந்தாலும் இதன் பின்பக்க கேமரா மாறுபடுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 6.1 இன்ச் ஸ்க்ரீன், Google Tensor G2 SOC சிப், Android 14 போன்றவை இடம்பெறும். இதன் விலை 45,000 ஆயிரம் ரூபாய் இருக்கும்.
​Google Pixel Foldதற்போது ட்ரெண்டிங்கில் இருக்கும் Fold வகை ஸ்மார்ட்போன்களில் முதல் முறையாக Google நிறுவனம் அதன் Pixel Fold போனை வெளியிடவுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் Samsung Galaxy Z Fold சீரிஸ் ஸ்மார்ட்போனிற்கு எதிராக வெளியாகவுள்ளது.
இதன் கவர் ஸ்க்ரீன் 5 முதல் 6 இன்ச் வரையிலும், முக்கிய ஸ்க்ரீன் 7.8 இன்ச் அளவிலும் உள்ளது. இதில் புதிய Google Tensor சிப் இடமபெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் விலை 1.45 லட்சம் ரூபாய் விலையில் இருக்கும். ஆனால் இது இந்தியாவில் வெளியாகாது என்றே தெரிகிறது.
Pixel TABமுதல் முறையாக Google Tablet ஒன்று வெளியாகிறது. இதில் Google Tensor G2 SoC சிப் இடம்பெறும். இந்த கருவி 10.9 இன்ச் IPS டிஸ்பிளே, 2560×1600 Pixel resolution வசதி இடம்பெறும். இதன் விலை 50 ஆயிரத்தில் இருந்து தொடங்கும். இதில் இரண்டு வேரியண்ட்கள் விற்பனை செய்யப்படும்.
​Bard AIGoogle Chrome உடன் Bard AI வெளியாகவுள்ளது. இது ஒரு செயற்கை நுண்ணறிவு கருவி ஆகும். தற்போது உலகில் பெரும் புரட்சி ஏற்படுத்தியிருக்கும் Microsoft Bing Chat AI கருவிக்கு நேரடி போட்டியாளராக உள்ளது.
Google Pixel 8 seriesஇந்த ஆண்டு பிற்பகுதியில் கூகுள் நிறுவனத்தின் அடுத்த பிரீமியம் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போனாக Google Pixel 8 வெளியாகும். இதில் மிகப்பெரிய 50MP Samsung கேமரா லென்ஸ் இடம்பெறும். இதில் 8GB RAM மற்றும் 12GB RAM என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது.
இதில் Pixel 8 ஸ்மார்ட்போன் 4300mAh பேட்டரி, Pixel 8 pro மாடலில் 5000mAh பேட்டரி இடம்பெறும். மேலும் இதில் Pixel 8 போனில் 6.4 இன்ச் டிஸ்பிளே மற்றும் Pixel 8 Pro மாடலில் 6.7 இன்ச் டிஸ்பிளே வசதி கொண்டிருக்கும்.
Google pixel Watch 2இந்த புதிய வாட்ச் Snapdragon W5+ Gen 1 சிப், 4nm Processor இடம்பெறும். கடந்த Pixel Watch Samsung Exynos 9110 சிப் இடம்பெற்றிருந்தது. ஆனால் தற்போது Snapdragon சிப் இதை விட சிறப்பானதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுவும் இந்த ஆண்டு பிற்பகுதியில் Google Pixel 8 சீரிஸ் ஸ்மார்ட்போனுடன் வெளியாகும்.
​செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸ்ல் ‘சமயம் தமிழ்’ இணையதளத்தை பின் தொடருங்கள்​

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.