இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள்
ரஜினியின் லால் சலாம் லுக் பற்றிய பேச்சு தான் தற்போது இணையத்தில் செம வைரலாக போய்க்கொண்டிருக்கிறது. 3, வை ராஜா வை ஆகிய படங்களை தொடர்ந்து ஐஸ்வர்யா இயக்கும் படம் தான் லால் சலாம். இவர் இயக்கிய முதல் இரண்டு படங்களுக்கு இருந்த எதிர்பார்ப்பை விட தற்போது லால் சலாம் படத்திற்க்கு மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு இருந்து வருகின்றது.
அதற்கு முக்கிய காரணம் ரஜினி தான். பல வருடங்களுக்கு பிறகு ரஜினி இப்படத்தின் மூலம் மீண்டும் கெஸ்ட் ரோலில் நடிக்கவுள்ளார். மேலும் பாட்ஷா படத்திற்கு பிறகு லால் சலாம் படத்தில் தான் ரஜினி முஸ்லீம் கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார்.
Lal Salaam: லால் சலாம் படத்தின் கதை இதுதானா ? செம மாஸா இருக்கும் போலயே..!
இவ்வாறு பல விஷயங்கள் லால் சலாம் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்த வண்ணம் இருக்க தற்போது இப்படத்தின் போஸ்டர் ஒன்று வெளியாகி கடுமையான விமர்சனத்திற்கு உண்டாகியுள்ளது. ரஜினியின் கதாபாத்திரத்தின் பெயர் மற்றும் அவரின் லுக் சில நாட்களுக்கு முன்பு அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
அண்மைசெய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் சமயம் தமிழ் இணையத்தளத்தி பின் தொடரவும்
அதனை பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது என்றுதான் சொல்லவேண்டும். ஒரு சூப்பர்ஸ்டாரின் படத்தின் போஸ்டர் இவ்வளவு சாதாரணமாக இருகின்றது என்பது போல பல கடுமையான விமர்சனங்களை ரசிகர்கள் முன்வைத்தனர். மேலும் இந்த போஸ்டர் மீம் மேட்டிரியலாகவும் மாறியுள்ளது.
இந்நிலையில் கடந்த வாரம் தான் ஜெயிலர் படத்தின் கிலிம்ப்ஸ் வீடியோ ரிலீஸ் தேதியுடன் வெளியிடப்பட்டது. செம மாஸாக வெளியான அந்த வீடியோ ரசிகர்களின் பேராதரவை பெற்றது. இதையடுத்து படத்தின் மீதான ஹைப்பும் அதிகரிக்க துவங்கியது. இந்த சமயத்தில் தான் லால் சலாம் படத்தின் போஸ்டர் வெளியாகி விமர்சனத்திற்கு உண்டாகி ஜெயிலர் படத்தின் ஹைப்பையும் குறைந்துவிட்டதாக ரசிகர்கள் சிலர் குறைகூறி வருகின்றனர்.
இந்நிலையில் ஒரு சிலரோ ஐஸ்வர்யாவிற்கும், லால் சலாம் படத்திற்கும் ஆதரவாகவும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அதாவது பல தரமான வெற்றிப்படங்களின் போஸ்டர்கள் சுமாராகவே இருந்து விமர்சனத்திற்கு உண்டாகியுள்ளது. எனவே லால் சலாம் படத்தின் போஸ்டர் சுமாராக இருப்பதன் காரணமாக படமும் சுமாராக தான் இருக்கும் என சொல்லிவிடமுடியாது.
ரஜினி பல வருடங்களுக்கு பிறகு கெஸ்ட் ரோலில் நடிக்கின்றார் என்றால் அந்த கதாபாத்திரத்தின் மீதும், படத்தின் மீதும் அவர் வைத்த நம்பிக்கை தான் காரணம். மேலும் போஸ்ட்டரை சாதாரணமாக வெளியிட்டு ரசிகர்கள் வைத்திருக்கும் எதிர்பார்ப்பை குறைத்து பின்பு படம் சிறப்பாக இருந்தால் அது லால் சலாம் படத்திற்கு பலமாகவே அமையும் என ரஜினியின் ரசிகர்கள் சிலர் லால் சலாம் படத்திற்கு ஆதரவாக பேசி வருகின்றனர்.
இந்நிலையில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்தை நாயர்களாக நடிக்கும் இப்படம் ஹிந்தியில் வெளியான kai po che படத்தின் ரீமேக் எனவும் சில செய்திகள் பரவி வருவது குறிப்பிடத்தக்கது.