இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள்
Sobhita Dhulipala interview: நடிகர் நாக சைதன்யாவும், சோபிதா துலிபாலாவும் காதலிப்பதாக பேசப்படுகிறது. இந்நிலையில் முதல் முறையாக அது குறித்து பேசியிருக்கிறார் சோபிதா.
நாக சைதன்யாசமந்தாவுக்கும், நாக சைதன்யாவுக்கும் சட்டப்படி விவாகரத்து ஆகி ஓராண்டு ஆகிவிட்டது. இந்நிலையில் நாக சைதன்யாவும், பொன்னியின் செல்வன் படம் புகழ் சோபிதா துலிபாலாவும் காதலிப்பதாக கடந்த சில மாதங்களாக பேசப்படுகிறது. அது குறித்து இருவரும் கண்டுகொள்ளாமல் இருந்தார்கள். இந்நிலையில் ஹைதராபாத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட சோபிதா துலிபாலா காதல் பேச்சு பற்றி விளக்கம் அளித்திருக்கிறார்.
ஐஸ்வர்யா தத்தாமேடையில் உணர்ச்சிவசப்பட்ட ஐஸ்வர்யா தத்தா!
சோபிதாசோபிதா கூறியதாவது, நல்ல படங்களில் நடிக்க கொடுத்து வைத்திருக்கிறேன். நான் ஒரு கிளாசிக்கல் டான்ஸர். எனக்கு நடனமாடுவது பிடிக்கும். இயக்குநர் மணிரத்னம் படத்தில் ஏ.ஆர். ரஹ்மான் இசையில் மூன்று பாடல்களுக்கு ஆடியது எனக்கு மிகப்பெரிய விஷயம் ஆகும். என் கெரியர் மீது தான் என் கவனம் இருக்கிறது என்றார்.
விளக்கம்சோபிதா துலிபாலா மேலும் கூறியதாவது, எதுவும் தெரியாமல் பேசுபவர்களுக்கு நான் பதில் அளிக்க வேண்டியது இல்லை என நினைக்கிறேன். நான் எதுவும் தவறு செய்யாத நிலையில் விளக்கம் அளிக்க வேண்டியது இல்லை. விஷயம் என்னவென்று தெரியாமல் அவர்கள் இஷ்டத்திற்கு எழுதுகிறார்கள். நம் வாழ்க்கையில் கவனம் செலுத்தி அதை மேம்படுத்த வேண்டும். நல்லவராக இருக்க முயற்சி செய்ய வேண்டும் என்றார்.
காதல்நாக சைதன்யாவும், சோபிதாவும் கடந்த 6 மாதங்களாக காதலிப்பதாக செய்திகள் வெளியகின. ஃபார்முலா ஒன் பந்தயம் என்றால் நாக சைதன்யாவுக்கும், சோபிதாவுக்கும் மிகவும் பிடிக்கும். அதன் மூலம் தான் அவர்களுக்கு இடையே நெருக்கம் ஏற்பட்டது. தற்போது எதையும் அறிவிக்க விரும்பவில்லை. ஒருவரையொருவர் தெரிந்து கொள்வதில் சந்தோஷமாக இருக்கிறார்கள் என அவர்களுக்கு நெருக்கமான ஒருவர் முன்பு தெரிவித்திருந்தார்.
கஸ்டடிகெரியரை பொறுத்தவரை மணிரத்னம் இயக்கத்தில் ஏப்ரல் 28ம் தேதி வெளியான பொன்னியின் செல்வன் 2 படத்தில் வானதியாக நடித்திருந்தார் சோபிதா துலிபாலா. அந்த படம் ரூ. 300 கோடிக்கும் மேல் வசூல் செய்திருக்கிறது. மேலும் கை நிறைய படங்கள் வைத்திருக்கிறார். நாக சைதன்யாவை பொறுத்தவரை வெங்கட் பிரபு இயக்கத்தில் கஸ்டடி படத்தில் நடித்துள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகியிருக்கும் கஸ்டடி படம் மே 12ம் தேதி ரிலீஸாகவிருக்கிறது.
Custody: கஸ்டடி கதைலாம் பெருசா இல்ல, பாட்டி வடை சுட்ட கதை தான்: வெங்கட் பிரபு
சமந்தாகஸ்டடி படத்தை விளம்பரம் செய்து கொண்டிருக்கிறார் நாக சைதன்யா. அப்பொழுது அவரிடம் சமந்தா பற்றி கேட்கப்படுகிறது. அப்படி கேட்டபோது தான் தங்களுக்கு விவாகரத்தாகி ஓராண்டாகிவிட்டதாக தெரிவித்தார். மேலும் சமந்தா அருமையானவர், அவருடன் சேர்ந்து வாழ்ந்த வாழ்க்கை மீது அதிக மரியாதை வைத்திருக்கிறேன் என பெருமையாக கூறினார்.
Naga Chaitanya: சமந்தா அருமையானவர், அவருடன் வாழ்ந்த வாழ்க்கை மீது மிகுந்த மரியாதை வைத்திருக்கிறேன்: நாக சைதன்யா
கெரியர்என் கடந்த காலத்துடன் தொடர்பே இல்லாத மூன்றாவது நபர் ஒருவரை கொண்டு வந்து அதன் மூலம் தலைப்புச் செய்தியாக்குகிறார்கள். அது அந்த மூன்றாவது நபரை அவமதிப்பதாகும் என நாக சைதன்யா கூறியிருந்தார். இந்நிலையில் சோபிதா துலிபாலாவும் காதல் பேச்சு பற்றி விளக்கம் அளிக்கத் தேவையில்லை என கூறியிருக்கிறார். இருவருமே தற்போது அவரவர் கெரியரில் கவனம் செலுத்தி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.