Nokia XR21: உலகிலேயே மிகவும் கடினமான ஸ்மார்ட்போன்! முதல் IP69K ரேட்டிங் போன்!

இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள்
IP Rating என்பது ஒரு எலக்ட்ரானிக் கருவி நீர் மற்றும் தூசு போன்றவற்றில் இருந்து எவ்வளவு பாதுகாப்பு கொடுக்கும் என்பதை பொறுத்து வழங்கப்படும் ஒரு பாதுகாப்பு மதிப்பெண் ஆகும். பிரீமியம் ஸ்மார்ட்போன்களுக்கு மட்டுமே வழங்கப்படும் இந்த பாதுகாப்பு மதிப்பு இப்போது மேலும் அதிகரித்து IP69K என்ற அளவிற்கு வந்துவிட்டது.

மிகவும் பிரீமியம் ஸ்மார்ட்போன் மாடலாக இருக்கக்கூடிய Samsung Galaxy Z Fold 4 ஸ்மார்ட்போனிலேயே IPX8 ரேட்டிங் மட்டுமே இடம்பெற்றுள்ளது. ஆனால் HMD Global நிறுவனத்தின் இந்தNokia XR21 இப்போது IP69K ரேட்டிங் பெற்றுள்ளது. இந்த IP69K ரேட்டிங் உள்ள ஸ்மார்ட்போன்கள் முழு Water மற்றும் Dust பாதுகாப்பு தரும்.

IP69K ரேட்டிங் என்றால் என்ன?IP என்றால் Ingress Protection என்று பொருள். இதில் 6 மற்றும் 9K ஆகிய இரண்டும் பாதுகாப்பு அளவை குறிப்பது. Dust Resistance என்பது 0 முதல் 6 வரையும், Water Resistance என்பது 0 முதல் 9K வரையும் இருக்கும். இப்படி IP69K பாதுகாப்பு இருப்பதால் ஸ்மார்ட்போன்களிலேயே அதிகப்படியான பாதுகாப்பு உள்ள ஸ்மார்ட்போனாக இது இருக்கிறது.
IP68 ரேட்டிங் உள்ள ஸ்மார்ட்போன்களான ஐபோன் 14 மாடல் சுமார் 6 மீட்டர் ஆழத்தில் 30 நிமிடங்கள் வரை தாக்குப்பிடிக்கும். Samsung Galaxy S23 1.5 மீட்டர் ஆழத்தில் 30 நிமிடங்கள் வரை தாக்குப்பிடிக்கும். இதில் சிறந்த வாட்டர் ரெசிஸ்டன்ஸ் ஐபோனில் கிடைக்கிறது.
அதற்கு நிகராக இதன் கட்டமைப்பு MIL STD 810H மூலம் உருவாக்கப்பட்டு ராணுவ தரத்தில் இருப்பதால் 1.5 மீட்டர் வரை Drop Resistant கொண்டுள்ளது. இதன் மேல்புறம் உள்ள பிளாஸ்டிக் மீது Bumpers இருப்பதால் கிழே விழுந்தாலும் விழும் அதிர்ச்சியை தாங்கும். ஆனாலும் இவற்றிற்கு வாரண்ட்டி எதுவும் கிடையாது. நேரடி பாதிப்பு ஏதாவது ஏற்பட்டால் முழு செலவு நாம் ஏற்கவேண்டும்.
Nokia XR21 விவரம்​டிஸ்பிளே
இந்த ஸ்மார்ட்போனில் 6.49 இன்ச் Corning Gorilla Glass Victus, 120HZ Refresh Rate, 450 நிட்ஸ் பிரைட்னஸ் அளவு, FHD+ 1080×2400 resolution வசதி, போன்றவை இடம்பெற்றுள்ளன.
​திறன் வசதிகள்இதில் Qualcomm Snapdragon 695 5G சிப் வசதி, Android 12 OS, 3 ஆண்டுகள் OS அப்டேட் மற்றும் 4 ஆண்டுகள் செக்யூரிட்டி அப்டேட் வசதி கிடைக்கும். மேலும் இதில் டூயல் ஸ்பீக்கர் சிஸ்டம், 6GB RAM, 128GB ஸ்டோரேஜ் வசதி, 5G கனெக்டிவிட்டி, ப்ளூடூத் 5.1, 3.5mm ஹெட் போன் ஜாக் போன்றவை இடம்பெற்றுள்ளது.
கேமரா வசதிகள்இதன் பின்பக்கம் 64MP + 8MP அல்ட்ரா வைட் கேமரா மற்றும் முன்பக்கம் 16MP செல்பி கேமரா இடம்பெற்றுள்ளது. இதன் பின்பக்கம் இரண்டு பிளாஷ் லைட் வசதி உள்ளது.
பேட்டரி வசதிகள்இந்த ஸ்மார்ட்போனில் 4800mAh பேட்டரி இடம்பெற்றுள்ளது. இதனுடன் 33W பாஸ்ட் சார்ஜிங் இருப்பதால் அதிவேகமாக இதனை சார்ஜிங் செய்யமுடியும். இந்த பேட்டரி 2 நாட்கள் நீடிக்கும் என்று நோக்கியா தெரிவித்துள்ளது.
மற்றவை
இதில் பவர் பட்டன் பிங்கர் பிரிண்ட் சென்சார் வசதி, face unlock வசதி, IP68/IP69K பாதுகாப்பு, OZO Spatial Audio Capture போன்ற வசதிகளும் இடம்பெற்றுள்ளன. இந்த ஸ்மார்ட்போன் விரைவில் உலகளவில் வெளியாகும்.
​​செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸ்ல் ‘சமயம் தமிழ்’ இணையதளத்தை பின் தொடருங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.