இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள்
பல படங்கள்ரஜினி நெல்சனின் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் சமீபத்தில் நடித்து முடித்துள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அனிருத்தின் இசையில் உருவாகும் இப்படத்தில் ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, மோகன்லால், ஷிவ்ராஜ்குமார், ஜாக்கி ஷாரூப் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகின்றனர். தற்போது ஜெயிலர் படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் ஆகஸ்ட் மாதம் 10 ஆம் தேதி இப்படம் திரையில் வெளியாகவுள்ளது. இதையடுத்து ரஜினி தனது மகள் ஐஸ்வர்யாவின் இயக்கத்தில் லால் சலாம் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்து வருகின்றார். இதன் படப்பிடிப்பு முடிந்தவுடன் ஞானவேல் இயக்கத்தில் உருவாகும் தன் 170 ஆவது திரைப்படத்தில் நடிக்கவுள்ளார் ரஜினி
கம்பாக்ரஜினி தொடர் தோல்விகளில் இருந்து வருவதால் அடுத்தடுத்த வெற்றிகளை குவிக்கும் முனைப்பில் இருக்கின்றார். அதன் காரணமாகவே தான் ஒரே சமயத்தில் பல படங்களில் நடிக்க கமிட்டாகியுள்ளார் ரஜினி. ஜெயிலர் படத்தை முடித்த கையோடு லால் சலாம் படத்தில் தற்போது நடித்து வருகின்றார் ரஜினி. இதைத்தொடர்ந்து ஞானவேலின் இயக்கத்தில் ஒரு படத்திலும், லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் ஒரு படத்திலும் ரஜினி நடிக்கவுள்ளார். இந்நிலையில் ஜெயிலர் திரைப்படத்தின் மீது அதீத நம்பிக்கை வைத்துள்ள ரஜினி அப்படம் தன்னை மீண்டும் வெற்றிப்பாதைக்கு அழைத்து வரும் என முழு நம்பிக்கையுடன் இருக்கின்றார். அதுமட்டுமல்லாமல் தொடர்ந்து வித்யாசமான கதைக்களங்களுடன் கூடிய படங்களில் நடித்து கம்பாக் கொடுக்க காத்துக்கொண்டிருக்கிறார் ரஜினி
எதிர்பார்ப்புகமல்ஹாசனின் விக்ரம் படத்தை போல மல்டிஸ்டாரர் படமாக ஜெயிலர் திரைப்படம் உருவாகி வருகின்றது. மோகன்லால், ஷிவ்ராஜ்குமார், ஜாக்கி ஷாரூப் என இந்திய சினிமாவில் இருக்கும் சூப்பர்ஸ்டார் நடிகர்கள் ஜெயிலர் படத்தில் நடித்து வருவதால் இப்படம் ஒரு பான் இந்திய படமாக உருவெடுத்துள்ளது. இந்நிலையில் சமீபத்தில் இப்படத்தை ரஜினி போட்டுப்பார்த்ததாகவும், படம் ரஜினியின் எதிர்பார்ப்பையும் மீறி சிறப்பாக வந்திருப்பதாகவும் பேசப்பட்டு வருகின்றது. எனவே இப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்று வசூலில் சாதனை படைக்கும் என அனைவராலும் எதிர்பார்க்காடுகின்றது.
லால் சலாம்இந்நிலையில் ரஜினி தற்போது லால் சலாம் படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்வதற்காக மும்பை சென்றுள்ளார். இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் தற்போது ரஜினியின் போர்ஷன்ஸ் மும்பையில் படமாக்கப்பட இருக்கின்றது. சமீபத்தில் தான் லால் சலாம் படத்திலிருந்து ரஜினியின் கதாபாத்திரமும் அவரின் லுக்கும் வெளியிடப்பட்டது. இந்நிலையில் ரஜினி இப்படத்திற்காக இரண்டு வாரங்கள் கால்ஷீட் கொடுத்துள்ளாராம். இரண்டு வாரத்திற்குள் ரஜினி சம்மந்தப்பட்ட காட்சிகளை ஐஸ்வர்யா எடுத்து முடித்துவிட்டால் ரஜினி அடுத்ததாக ஞானவேலின் படத்தில் நடிக்க போய்விடுவாராம். லால் சலாம் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் ரஜினி இப்படத்தில் கிட்டத்தட்ட 40 நிமிடங்கள் வருவார் என எதிர்பார்க்கப்படுகின்றது. கிரிக்கெட் விளையாட்டை அடிப்படையாக கொண்டு உருவாகும் இப்படத்தில் மும்பையை சேர்ந்த டானாக ரஜினி நடிக்கவுள்ளார். முதலில் லால் சலாம் படத்தில் ரஜினி நடிக்க 7 நாட்கள் தான் கால்ஷீட் கொடுத்தார் என்றும், பின்பு இரண்டு வாரங்களுக்கு தன் கால்ஷீட்டை அதிகப்படுத்தியுள்ளார் என்றும் தகவல் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது