இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள்
உலகில் இன்று பெரும்பாலானவர்கள் இணையத்தில் ஒரு விஷயத்தை தேடவேண்டும் என்றால் Google Chrome அல்லது Microsoft Bing போன்ற உலாவிகளை அதிகம் பயன்படுத்துகிறார்கள். இதேபோல Apple Safari, DuckDuckGo, Brave போன்ற பல உலாவி இருந்தாலும்
Google Chrome
முதன்மையான இடத்தில் தொடர்ந்து நீடிக்கிறது.
ஆனால் தற்போது இந்த உலாவிக்கு போட்டியாளராக இந்தியாவை சேர்ந்த Zoho நிறுவனம் களம் இறங்கியுள்ளது. Ulaa என்று பெயரிடப்பட்டுள்ள இந்த உலாவி தற்போது அனைத்து OS வகைகளிலும் கிடைக்கிறது.
Ulaa Browserஇந்த இந்திய உலாவி Chromium சார்ந்து உருவாக்கப்பட்டது. இதில் பல தனித்துவமான வசதிகள் மற்றும் திறன் இருப்பதால் பயனர்களுக்கு தேடலில் ஒரு புதிய அனுபவத்தை இது நிச்சயம் வழங்கும். இவை எல்லாவற்றிற்கும் மேலாக இது இந்தியாவை சேர்ந்த நிறுவனம் என்பதால் இதனை பயன்படுத்துவதால் மேலும் அது மேன்மையடையும். இது பற்றிய சில முக்கிய குறிப்புக்கள் பற்றி பார்க்கலாம்.
Ulaaவில் DuckDuckGo தேடல் கருவிChrome மற்றும் Safari போன்ற உலாவிகள் Google Search Engine பயன்படுத்துகின்றன. ஆனால் Ulaa பொறுத்தவரை DuckDuckGo Search Engine பயன்படுத்துகிறது. இதனால் உங்கள் தேடல் பற்றிய விவரங்கள் அதிக பாதுகாப்புடனும் நம்பிக்கையுடனும் இருக்கும்.
மேலும் உங்களுக்கு நீங்கள் தேடிய ஒரு விஷயத்தை சார்ந்த விளம்பரங்கள் மற்றும் அழைப்புகள் எதுவும் வராது. உங்கள் விவரங்கள் அனைத்தும் பாதுகாப்பாக இருக்கும். இதில் நீங்கள் Google, Bing , Yahoo போன்ற தேடல் கருவிகளையும் பயன்படுத்திக்கொள்ளலாம்.
அனைத்து வித OSகளிலும் பயன்படுத்தலாம்இந்த உலாவி Android, ios, Windows, Mac OS என அனைத்திலும் பயன்படுத்தலாம். இதை Ulaa இணையதளம் அல்லது Play Store, App Store என எங்கிருந்து வேண்டுமானாலும் Download செய்யமுடியும்.
பலவிதமான ModesUlaa உங்களுக்கு ஐந்து விதமான Mode வசதிகளை வழங்குகிறது. இதில் Personal, Work, Kids, Developer, Open Season ஆகிய மோட்களை வழங்குகிறது. இதில் Default ஆப்ஷனாக personal mode இருக்கும். Work Mode தேவையில்லாத கவனக்குறைவு ஏற்படுத்தும் இணையதளங்களை தடுக்கும்.
Kids Mode ஒரு புதிய வண்ணத்தில் UI ஒன்றை காட்டும். இதில் சில இணையதளங்களை திறக்கமுடியாது. Developer Mode தடைகளை எல்லாம் தாண்டி உங்களை இணையம் பயன்படுத்த அனுமதிக்கும்.
விளம்பரங்கள் கிடையாதுஇதில் நேரடியாக Ad Blocker இருப்பதால் உங்கள் தேடலை இடைமறிக்கும் விளம்பரங்கள் எதுவும் வராது. மேலும் நீங்கள் என்ன தேடுகிறீர்கள் என்பதை ட்ராக் செய்ய முடியாத வகையில் இதில் Tracking Blocker உள்ளது.
Chromium சார்ந்ததுGoogle Chrome போலவே இதுவும் Chromium சார்ந்து உருவாக்கப்பட்டுள்ளது என்பதால் உங்களுக்கு Chrome போன்ற தேடல் அனுபத்தை தரும். ஆனால் இதில் தனிப்பட்ட வசதிகள் பல சேர்க்கப்பட்டுள்ளதால் Google Chrome Browserகளில் இல்லாத பல வசதிகளை நீங்கள் இதில் பயன்படுத்தலாம். மேலும் அப்டேட் மூலமாக அது தொடர்ந்து மேம்படுத்தப்படும் என்றும் Zoho நிறுவனம் உறுதியளித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸ்ல் ‘சமயம் தமிழ்’ இணையதளத்தை பின் தொடருங்கள்