பிரசத்தி பெற்ற ஏதெர் எனெர்ஜி நிறுவனத்தின் குறைந்த விலை எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலாக 450S அறிமுகம் செய்யப்பட உள்ளது. ஓலா S1 ஏர், டிவிஎஸ் ஐக்யூப் உள்ளிட்ட பட்ஜெட் விலை மாடல்களை எதிர்கொள்ளும் வகையில் ஏதெர் 450S என்ற பெயரை பயன்படுத்துவதற்காக காப்புரிமை கோரி விண்ணப்பித்துள்ளது.
இந்திய சந்தையில் பேட்டரி மின்சாரத்தில் இயங்கும் இருசக்கர வாகன விற்பனை எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகின்ற நிலையில் பல்வேறு புதிய மாடல்களை தொடர்ந்து அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றது.
Ather 450S Escooter
தற்பொழுது ஏதெர் எனெர்ஜி நிறுவனம் 450X மற்றும் 450X Pro-Packed என இரண்டு வேரியண்டுகள் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், இந்த மாடல்களை விட குறைந்த விலையில் அனேகமாக 100 கிமீ ரேஞ்சு வழங்கும் வகையில் வெளியாகலாம்.
ஏதெர் 450S மாடல் குறைந்த கனெக்டேட் வசதிகளை கொண்டு சிறிய அளவிலான கிளஸ்ட்டர் கொடுக்கப்பட்டிருக்கலாம். இந்த மாடலில் ரைடிங் மோடுகள் இடம்பெறாது.
வரவிருக்கும் ஏதெர் 450S விலை ரூ. 1.45 லட்சம் மற்றும் ரூ. 1.50 லட்சத்துக்குள் அமைந்திருக்கலாம். ஏதெர் அதிக விற்பனை எண்ணிக்கை பதிவு செய்யும் வகையில் நோக்கமாக கொண்டு அறிமுகம் செய்யப்படலாம்.
சமீபத்தில் ஏதெர், ஓலா, டிவிஎஸ் மற்றும் விடா ஆகிய நிறுவனங்கள் ஸ்கூட்டர் வாங்கியவர்களுக்கு ரூ.288 கோடியை திரும்ப வழங்க இந்திய அரசு உத்தரவிட்டுள்ளது.