சென்னை: தமிழக பாஜக தமிழக தலைவர் அண்ணாமலைக்கு எதிராக, முதலமைச்சர் ஸ்டாலின் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. திமுக ஃபைல்ஸ் என்ற பெயரில் முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரமுகர்களின், சொத்து விவரங்கள் என கூறி அண்ணாமலை அண்ணாமலை பல விவரங்களை வெளியிட்டார். இதை எதிர்த்து தான் முதலமைச்சர் ஸ்டாலின் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.