கடந்த மாதம் 14 ஆம் தேதி திமுகவினரின் சொத்து பட்டியலை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டு இருந்தார்.
திமுகாவிரின் சொத்து பட்டியலில், ஜெகத்ரட்சகன் – ரூ.50 ஆயிரம் கோடி, எ.வ.வேலு – ரூ.5 ஆயிரம் கோடி
கே.என்.நேரு – ரூ.2,495 கோடி, கனிமொழி- ரூ.830 கோடி, கலாநிதிமாறன் – ரூ.12 ஆயிரம் கோடி, உதயநிதி – ரூ.2 ஆயிரம் கோடி, சபரீசன் – ரூ.902 கோடி, ஜி ஸ்கொயர் வருமானம் – ரூ.38 ஆயிரம் கோடி சொத்து சேர்த்து வைத்திருப்பதாக அண்ணாமலை அதில் தெரிவித்திருந்தார்.
மேலும், தமிழக முதல்வர் ஸ்டாலின் 200 கோடிக்கு ரூபாய் லஞ்சம் வாங்கியதாகவும் அண்ணாமலை குற்றம் சாட்டியிருந்தார்.
இந்நிலையில், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது முதலமைச்சர் மு க ஸ்டாலின் சார்பில் அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி பத்திரிகையாளர் சந்திப்பின்போது முதல்வருக்கு எதிராக அவதூறாக கருத்துக்களை வெளியிட்டதாகவும், எந்த அடிப்படை ஆதாரமும் இல்லாமல் அவதூறு தகவல்களையும் வெளியிட்டதாக முதல்வர் தரப்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.