இலங்கை GSP வரிச்சலுகைக்கு மீண்டும் விண்ணப்பிக்க வேண்டும்: அலி சப்ரி


2024 மற்றும் 2034க்கு இடைப்பட்ட காலப்பகுதியில் திருத்தப்பட்ட அளவுகோலின்
கீழ் ஐரோப்பிய ஒன்றிய சந்தைக்கான ஜீ.எஸ்.பி. (GSP) வர்த்தக வசதிக்காக, இலங்கை மீண்டும்
ஒருமுறை விண்ணப்பிக்கவேண்டும் என்று அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். 

ஐரோப்பிய ஆணையம், 2021ஆம் ஆண்டில், அடுத்த பத்து ஆண்டுக் காலத்திற்கு ஒரு சட்ட
முன்மொழிவை ஏற்றுக்கொண்டுள்ளது. 

எனினும் தற்போதைய ஜிஎஸ்பி விதிமுறை இந்த ஆண்டு இறுதியுடன் காலாவதியாக உள்ளது.

இந்தநிலையில், ஜீ.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகைக்காக மீண்டும் விண்ணப்பிப்பதற்கான
ஒப்புதல் கோரி ஒரு கூட்டு அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக
அமைச்சர் தெரிவித்துள்ளார். 

இலங்கை GSP வரிச்சலுகைக்கு மீண்டும் விண்ணப்பிக்க வேண்டும்: அலி சப்ரி | Sri Lanka To Reapply For Gsp

பேச்சுவார்த்தை 

இது தொடர்பாகக் கடந்த திங்கட்கிழமை (01.05.2023) ஐரோப்பிய வெளிவிவகார சேவையின் ஆசிய மற்றும்
பசிபிக் பிராந்தியத்திற்கான பிரதி முகாமைத்துவ பணிப்பாளர் பாவ்லா
பாம்பலோனியுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக அமைச்சர் கூறியுள்ளார்.

பயங்கரவாத எதிர்ப்பு யோசனையின் விதிகள் குறித்து அவர் தமது அதிருப்தியை
வெளியிட்டதாகவும் சப்ரி தெரிவித்துள்ளார். 

ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜீ.எஸ்.பி. வரிச்சலுகையானது, மூன்று ஏற்பாடுகளை
உள்ளடக்கியது, ஜீ.எஸ்.பி. என்பது குறைந்த மற்றும் குறைந்த நடுத்தர வருமானம் கொண்ட
நாடுகளுக்கான நிலையான சலுகையாகும்.

இலங்கை GSP வரிச்சலுகைக்கு மீண்டும் விண்ணப்பிக்க வேண்டும்: அலி சப்ரி | Sri Lanka To Reapply For Gsp

நடுத்தர வருமானம் கொண்ட நாடுகள்

இதன் பொருள் மூன்றில் இரண்டு பங்கு வரிகளில் சுங்க வரிகளைப் பகுதி அல்லது
முழுமையாக நீக்குதல்.

ஜீ.எஸ்.பி. பிளஸ் என்பது நிலையான வளர்ச்சி மற்றும் நல்லாட்சிக்கான ஒரு சிறப்பு
ஊக்குவிப்பு ஏற்பாடாகும்.

இதன்கீழ் பாதிக்கப்படக்கூடிய குறைந்த மற்றும் குறைந்த நடுத்தர வருமானம் கொண்ட
நாடுகளுக்குக் கட்டணங்களை 0 (பூஜ்யம்) சதவீதமாகக் குறைக்கிறது.

மூன்றாவது ஏற்பாடு EBA (Everything But Arms) குறைந்த வளர்ச்சியடைந்த
நாடுகளுக்கு ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளைத் தவிர அனைத்து
தயாரிப்புகளுக்கும் சந்தையில் வரி-இலவச, ஒதுக்கீடு இல்லாத அணுகலை வழங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.