உலகம் திருப்புமுனையில் உள்ளது, ரஷ்யாவிற்கு எதிராக போர் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.
வெற்றி தின கொண்டாட்டம்
15 மாதங்களாக தொடரும் போர் நடவடிக்கை மற்றும் தீவிர பாதுகாப்பு அச்சங்களுக்கு மத்தியில், இரண்டாம் உலக போரில் நாஜிகளை ரஷ்யாவை வென்றதை போற்றும் வகையில், செவ்வாய் கிழமை வெற்றி தின அணிவகுப்பு கொண்டாட்டம் ரஷ்யாவின் சிவப்பு சதுக்கத்தில் நடத்தப்பட்டது.
இந்த வெற்றி தின அணிவகுப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், உலகம் திருப்புமுனையில் உள்ளது மற்றும் ரஷ்யாவுக்கு எதிராக போர் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
The Russian president accuses the West of Russophobia during his speech at the Victory Day parade in Moscow.
Read more updates on the Ukraine-Russia war: https://t.co/TmtZVUmN9Q pic.twitter.com/VGUeo4SHHv
— Sky News (@SkyNews) May 9, 2023
மேலும் போரில் ரஷ்யாவின் வெற்றுக்கு உறுதியளித்த புடின், ரஷ்யாவின் எதிர்காலம் உக்ரைனில் போரிடும் ராணுவ வீரர்களின் கைகளில் உள்ளது என்று குறிப்பிட்டார்.
மொத்த நாடும் உங்கள் பின்னால் உள்ளது
அத்துடன், சிவப்பு சதுக்கத்தில் நடைபெற்ற ரஷ்யாவின் வெற்றி தின கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட உக்ரைனில் சண்டையிடும் சில நூறு ரஷ்ய வீரர்களிடம், ஒட்டுமொத்த நாடும் உங்களுடன் இருப்பதாக ரஷ்ய ஜனாதிபதி புடின் வாக்குறுதியளித்தார்.
Every year, Russia celebrates Victory Day on May 9th with a parade on Red Square in Moscow. Victory Day celebrates the defeat of Nazi Germany in WW2. Russia refers to this war as The Great Patriotic War.
Why is there no similar celebration in the United States? The US… pic.twitter.com/msiFcKAeUK
— dana (@dana916) May 9, 2023
தொடர்ந்து பேசிய புடின், ரஷ்யாவின் பாதுகாப்பு இன்று உங்களை நம்பி உள்ளது, நாட்டின் எதிர்காலமும், நம்முடைய மக்களும் உங்களை நம்பி உள்ளனர் என தெரிவித்தார்.
மேற்கத்திய நாடுகளின் செயல்களை குற்றம்சாட்டிய புடின், அவர்களின் இலக்கு ஒன்றும் இங்கு புதிதல்ல, நமது நாட்டை நிலைகுலைய வைத்து அழிப்பது மட்டுமே அவர்கள் அடைய விரும்புவது என குறிப்பிட்டார்.
மேலும் இவை அனைத்தையும் ரஷ்யா மீண்டு வரும் என்றும் புடின் சூளுரைத்தார்.