ஏ.ஆர்.ரஹ்மான், மணிரத்னம் மீது புகார் அளித்த ஹிந்துஸ்தான் கலைஞர்..!!

இயக்குனர் மணிரத்னம் இயக்கிய ‘பொன்னியின் செல்வன்‘ முதல் பாகம் கடந்த வருடம் வெளியானது. இந்த படத்தில் இடம் பெற்ற அனைத்து பாடல்களும் பெரிய வெற்றி பெற்றது.

ஆனால் சமீபத்தில் வெளியான ‘பொன்னியின் செல்வன்‘ இரண்டாம் பாகத்தில் உள்ள பாடல்கள் அந்த அளவுக்கு வெற்றி பெறவில்லை என்றாலும் ‘வீரா ராஜ வீரா‘ என்ற பாடல் அனைவரையும் கவர்ந்தது. தற்போது இந்த பாடல் எங்கள் மெட்டு என்று இந்துஸ்தானி இசை கலைஞர் உஸ்தாத் வசிபுதீன் தாகர் என்பவர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கும், இயக்குனர் மணிரத்னத்திற்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

அவர் அனுப்பிய நோட்டீஸில் இந்த பாடலை தனது குடும்பத்தினர் ‘அதன‘ ராகத்தில் உருவாக்கி இருந்தார்கள். 1978-ம் ஆண்டு இந்த பாடலை ஹாலந்தில் நடந்த இசை நிகழ்ச்சியில் அரங்கேற்றினார்கள். எங்கள் குடும்பத்தின் அனுமதி பெறாமல் இந்த பாடலை ஏ.ஆர்.ரஹ்மான் பயன்படுத்தி உள்ளார் என குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு மணிரத்னம் சார்பில் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் பதிலளித்துள்ளது. அந்த பதிவில், ‘வீரா ராஜ வீரா‘ பாடல் 13-ம் நூற்றாண்டில் நாராயண பண்டிதசாரியால் இயற்றப்பட்ட இசையைத் தழுவி எடுக்கப்பட்டது.

இது அனைவருக்கும் பொதுவானது. மேலும், இப்பாடல் ‘த்ருபத்‘ இசைப்பாணியில் இயற்றப்பட்டது. விளம்பர லாப நோக்கத்துக்காக உஸ்தாத் வசிபுதின் தாகர் பொன்னியின் செல்வன் படக்குழு மீதும், ஏ.ஆர்.ரஹ்மான் மீதும் புகார் அளித்திருப்பதாக கூறப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.