அமெரிக்காவை சேர்ந்த பிராட் அண்ட் விட்னி நிறுவனத்தின் எஞ்சின்களை மட்டுமே நம்பி இருந்ததால் தான் கோ ஃபர்ஸ்ட் விமான நிறுவனம் திவால் ஆனதாக வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
இன்டிகோ போன்ற விமான நிறுவனங்கள் கூட, தங்கள் விமானங்களில் பிராட் அண்ட் விட்னி எஞ்சினை பயன்படுத்தினாலும், அதே நேரத்தில் அதற்கு மாற்றாக CFM எஞ்சினைகளையும் பயன்படுத்தி வருவதை அவர்கள் சுட்டிக்காட்டி உள்ளனர்.
அப்படி இருக்கும் போது, கோ ஃபர்ஸ்ட் நிறுவனம் மட்டும் எதற்காக ஒரே நிறுவனத்தை நம்பி இருந்தது என்று கேள்வி எழுப்புகின்றனர். கோ ஃபர்ஸ்ட்டைப் போலவே இதற்கு முன் கிங் ஃபிஷர் நிறுவனமும் பிராட் அண்ட் விட்னி எஞ்சினை மட்டுமே நம்பி இழப்பை சந்தித்ததை அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
எனவே, ஒன்றுக்கும் மேற்பட்ட நிறுவனங்களிடம் இருந்து எஞ்சின்களை வாங்குவதுடன், எஞ்சின்களை சர்வீஸ் செய்வது தொடர்பான ஒப்பந்தங்களை வலுவாக அமைத்துக் கொள்வது தான் விமான நிறுவனங்கள் வெற்றிகரமாக நடப்பதற்கான வழி என்று வல்லுநர்கள் குறிப்பிட்டுள்னர். கோ ஃபர்ஸ்ட் நிறுவனம் சரிவில் இருந்து மீண்டு செயல்பட தொடங்கினால் இனியாவது வேறு நிறுவன எஞ்சின்களை பயன்படுத்த வேண்டும் என்று நிபுணர்கள் ஆலோசனை கூறியுள்ளனர்.