கணவரின் இறப்பால் ஏற்பட்ட துயரம் குறித்து நூல் வெளியீடு: கொலை வழக்கில் சிக்கிய பெண்


அமெரிக்க பெண் ஒருவர் தமது கணவரின் திடீர் இறப்பை தாங்க முடியாமல், துக்கம் பற்றிய நூல் ஒன்றை எழுதி வெளியிட்ட நிலையில், கொலை வழக்கில் சிக்கியுள்ளார்.

அளவுக்கு மீறிய ஃபெண்டானில்

கடந்த 2022 மார்ச் மாதம் பொலிசாரை தொடர்புகொண்ட மூன்று பிள்ளைகளுக்கு தாயாரான கூரி ரிச்சின்ஸ், தமது கணவர் எரிக் உடல் தொடுவதற்கு பனிக்கட்டி போல உள்ளது, உதவ முன்வர வேண்டும் என கோரியுள்ளார்.

கணவரின் இறப்பால் ஏற்பட்ட துயரம் குறித்து நூல் வெளியீடு: கொலை வழக்கில் சிக்கிய பெண் | Husband Murder Bereavement Author Charged Credit: Facebook

தமது கணவருக்கு ஓட்கா பானத்தை கலந்து அளித்திருந்ததாகவும், அதன் பின்னர் சில மணிநேரமாக பேச்சு மூச்சின்றி காணப்படுகிறார் எனவும் குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில் மருத்துவ பரிசோதகர் முன்னெடுத்த சோதனையில், எரிக் அளவுக்கு மீறிய ஃபெண்டானில் பயன்பாடு காரணமாக மரணமடைந்துள்ளதை கண்டறிந்தனர்.

நீதிமன்ற தரவுகளில் 2021 டிசம்பர் மற்றும் 2022 பிப்ரவரி மாதங்களுக்கு இடையே போதைப்பொருள் குற்றச்சாட்டில் முன்னர் கைது செய்யப்பட்ட நபருக்கு ரிச்சின்ஸ் குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார்.
அதில் முதுகில் காயம்பட்ட ஒருவருக்கு பரிந்துரைக்கப்பட்ட வலி நிவாரணி மருந்துகளை கோரியிருந்தார்.

மட்டுமின்றி, ஃபெண்டானில் வேண்டும் என கட்டாயப்படுத்தியுள்ளார். இதனையடுத்து 3 நாட்களுக்கு பின்னர் அவர் பெற்றுக்கொண்டுள்ளார்.
இந்த நிலையில், எரிக் மற்றும் அவரது மனைவி ரிச்சின்ஸ் ஆகிய இருவரும் காதலர் தின இரவு விருந்து ஒன்றில் கலந்து கொண்டுள்ளனர்.

கொலை செய்ததாக வழக்கு

இதன் பின்னர் எரிக் நோய்வாய்ப்பட்டார்.
மட்டுமின்றி, தமக்கு விஷம் அளிக்கப்பட்டதாக எரிக் நம்பியதுடன், தனது மனைவி தனக்கு விஷம் கொடுக்க முயற்சிப்பதாக எரிக் ஒரு நண்பரிடமும் கூறியுள்ளார்.

கணவரின் இறப்பால் ஏற்பட்ட துயரம் குறித்து நூல் வெளியீடு: கொலை வழக்கில் சிக்கிய பெண் | Husband Murder Bereavement Author Charged Credit: KPCW

இந்த நிலையில் மார்ச் 4ம் திகதி பொலிசாருக்கு தகவல் அளித்த ரிச்சின்ஸ், தமது கணவர் பேச்சு மூச்சின்றி காணப்படுவதாக தெரிவித்துள்ளார்.
எரிக் மரணமடைந்து ஓராண்டுக்கு பின்னர், சிறார்களுக்கு என ஒரு நூல் எழுதி வெளியிட்டுள்ளார் ரிச்சின்ஸ்.

அதில் உற்றார் உறவினர்களை திடீரென்று இழந்துவிட்டால், அந்த துயரத்தில் இருந்து மீள்வது குறித்து விளக்கியிருந்தார்.
நூல் வெளியான இரண்டு மாதங்களில் பொலிசார் ரிச்சின்ஸ் மீதான சந்தேகத்தை உறுதி செய்துள்ளதுடன்,

கணவனை திட்டமிட்டு கொலை செய்ததாக வழக்கும் பதிந்துள்ளனர்.
அவரை கைது செய்யும் பொருட்டு மே 19ம் திகதி பொலிசார் நீதிமன்றத்தை நாட உள்ளனர்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.