கர்நாடக சட்டமன்ற தேர்தல் எக்ஸிட் போல் 2023 முடிவுகள்: எங்கு, எப்படி பார்ப்பது?

தென்னிந்தியாவில் பாஜக ஆளும் ஒரே மாநிலம் கர்நாடகா. இங்கு நடைபெறும் சட்டமன்ற தேர்தல் அக்கட்சிக்கு மட்டுமின்றி
காங்கிரஸ்
, மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகியவற்றுக்கும் ஓர் அக்னி பரீட்சை ஆகும். அடுத்த ஆண்டு மக்களவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் கர்நாடக தேர்தல் முடிவுகள் ஒரு முன்னோட்டமாக இருக்கும் எனச் சொல்லப்படுகிறது. இந்நிலையில் இன்று காலை 7 மணிக்கு தொடங்கி வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

எக்ஸிட் போல் முடிவுகள்

பிற்பகல் 1 மணி நிலவரப்படி 37.25 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. மாலை 6 மணிக்குள் 70 முதல் 80 சதவீத வாக்குகள் வரை பதிவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பிறகு தான் ஹைலைட்டான விஷயமே அரங்கேறப் போகிறது. செய்தி தொலைக்காட்சிகள், அரசியல் பகுப்பாய்வு நிறுவனங்கள் தங்களது எக்ஸிட் போல் முடிவுகளுடன் தயாராக இருக்கின்றன.

கர்நாடக சட்டமன்ற தேர்தல்

அதாவது தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள். இதை பார்ப்பதற்கு பெரும் கூட்டமே காத்திருக்கிறது. இந்த கணிப்புகளை யாரெல்லாம் வெளியிடுவர்? எங்கு சென்று பார்ப்பது? போன்ற கேள்விகள் சிலரை துளைத்து எடுக்கலாம். அவர்களுக்கான பதில் இங்கே இருக்கிறது.

வ.எண்எக்ஸிட் போல் வெளியிடும் நிறுவனங்கள்1டைம்ஸ் நவ் (Times Now)2ஏபிபி – சி ஓட்டர் (ABP – C Voter)3லோக்நிதி – சிஎஸ்டிஎஸ் (Lokniti – CSDS)4ஆக்சிஸ் மை இந்தியா (Axis My India)5டுடேஸ் சாணக்யா (Today’s Chanakya)6ஆஜ் தக் மற்றும் இந்தியா டுடே (Aaj Tak and India Today)7ஜி நியூஸ் (Zee News)8டிவி 9 (TV9)9நியூஸ் 24 (News24)
சரியாக மாலை 6 மணிக்கு

இதேபோல் பல்வேறு நிறுவனங்கள் கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிட காத்திருக்கின்றன. இன்று மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு முடிந்த அடுத்த வினாடியே செய்தி தொலைக்காட்சிகளின் நேரலை அனல்பறக்க ஆரம்பித்துவிடும். அரசியல் விமர்சகர்களின் விவாதம் ஒருபுறம், புள்ளி விவரங்களை அடுக்கடுக்காய் எடுத்துரைக்கும் செய்தியாளர்கள் மறுபுறம், சேனல்களை மாற்றி மாற்றி தேர்தல் முடிவுகளை கணிக்கும் பொதுமக்கள் இன்னொரு புறம்.

கர்நாடக தேர்தல் அரசியல்

இப்படித்தான் இன்றைய இரவு முடியப் போகிறது. கர்நாடக சட்டமன்ற தேர்தல் முடிவுகளில் பல்வேறு சுவாரஸியமான வரலாறுகள் இருக்கின்றன. உதாரணமாக, 1985ஆம் ஆண்டிற்கு பின்னர் ஒரே கட்சி மீண்டும் ஆட்சியை பிடித்தது இல்லை. கிட்டதட்ட 38 ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்நிலையில் இந்த மரபை உடைத்தெறிய பாஜக வியூகம் வகுத்து செயல்பட்டிருக்கிறது.

பாஜக vs காங்கிரஸ் vs மதச்சார்பற்ற ஜனதா தளம்

பொதுக்கூட்டம், பேரணி, வீதி வீதியாக, வீடு வீடாக சென்று பிரச்சாரம் என பிரதமர் மோடி முதல் உள்ளூர் பாஜக தலைவர்கள் வரை தீயாய் வேலை செய்தனர். மறுபுறம் சோனியா காந்தி, ராகுல் காந்தி, சித்தராமையா, டிகே சிவக்குமார் என பலரும் காங்கிரஸ் வெற்றிக்கு தீவிரமாக களப்பணியாற்றினர். இந்த இரண்டு கட்சிகளுக்கும் குடைச்சல் கொடுக்கும் வகையில் மதச்சார்பற்ற ஜனதா தளம் வேலை செய்துள்ளது.

கிங் மேக்கர் கனவு, ஆட்சியை பிடிக்கும் வியூகம், ஆட்சி கட்டிலை தக்க வைக்க திட்டம் என மூன்று திசைகளில் கர்நாடக அரசியல் களம் தெறிக்கவிட்டிருக்கிறது. அடுத்த 5 ஆண்டுகள் யாருக்கானது என்பதை தெரிந்து கொள்ள மே 13ஆம் தேதி வரை காத்திருப்போம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.