கொல்கத்தா ராஜ்பவன் அருகே உள்ள கட்டிடத்தில் தீ விபத்து..

கொல்கத்தாவில் ஆளுநர் மாளிகைக்கு மிக அருகே உள்ள கட்டிடம் ஒன்றில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது.

சரஃப் பவன் என்ற அந்த கட்டிடத்தின் மேல் மாடியில் திடீரென பற்றி எரிந்த தீயால் அந்தப் பகுதி முழுவதும் வெண்புகை மூட்டம் சூழ்ந்தது.

உடனடியாக 9 வாகனங்களில் வந்த தீயணைப்புப் படையினர், கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்த நெருப்பை நீண்ட போராட்டத்துக்குப் பின் அணைத்தனர்.

தீ விபத்துக்கான காரணம் தெரியவில்லை. அது பற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர். விபத்தின் போது ஒருவர் காயமடைந்தார். அவருக்கு ராஜ் பவன் மருத்துவர்கள் சிகிச்சை அளித்துள்ளனர்.

இந்த சம்பவத்தை பற்றி அறிந்து ராஜ் பவனில் இருந்து வெளியே வந்த ஆளுநர் சி.வி. அனந்த போஸ், தீயை அணைக்க ஒன்றுபட்டு போராடிய அனைவரையும் பாராட்டினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.