கேரளாவில் சிகிச்சைக்கு வந்த விசாரணை கைதி ஒருவர் மருத்துவ மாணவியை தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் நடந்துள்ளது.
கேரளாவின் கொட்டக்கார பகுதியை சேர்ந்தவர் சந்தீப், மதுவுக்கு அடிமையான இவர் அக்கம்பக்கத்தில் அடிக்கடி சண்டையிட்டு வந்துள்ளார்.
நேற்றிரவும் வழக்கம் போல் சண்டை ஏற்பட, உடனடியாக போலிசில் புகார் கொடுத்துள்ளனர்.
போலிசார் வந்து சந்தீப்பை விசாரணைக்காக போலிஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றுள்ளனர், அங்கிருந்து மருத்துவ பரிசோதனைக்காக கொட்டாரக்கார தாலுகா தலைமை மருத்துவமனைக்கு போலிஸ் அதிகாரிகள் அழைத்து சென்றுள்ளனர்.
அங்கு இறுதியாண்டு படிக்கும் மாணவி வந்தனா தாஸ், சந்தீப்புக்கு சிகிச்சையளித்துள்ளார்.
சந்தீப்பின் உடலில் உள்ள காயங்களுக்கு மருந்து அளித்துக்கொண்டிருக்கும் போதே, வந்தனா தாஸை தாக்கியுள்ளார்.
இதில் வந்தனா படுகாயமடைந்துள்ளார், தடுக்க வந்த மற்ற ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளையும் சந்தீப் தாக்கியுள்ளார்.
மருத்துவ சிகிச்சை பெற்று வந்த வந்தனா, சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார், இதனையடுத்து மாணவர்கள் ஒன்றிணைந்து போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் விளக்கம் அளித்துள்ள போலிசார், சந்தீப் மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போதும், சிகிச்சை அளிக்கும் போதும் அமைதியாகவே இருந்தார்.
அவரது உறவினர் வந்து பேச முயன்ற போது தான் வன்முறையில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளார்.