ஜீன்ஸ் பாக்கெட்டில் இளைஞர் ஒருவர் வைத்திருந்த செல்போன் திடீரென வெடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவில் ரயில்வே ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வரும் ஹரிஸ் ரகுமான் (23) என்ற இளைஞர் கோழிக்கோட்டில் உள்ள தனது அலுவலகத்திற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, அவரது ஜீன்ஸ் பாக்கெட்டில் வைத்திருந்த செல்போன் திடீரென வெடித்து சிதறியது.
இளைஞரின் ஜீன்ஸ் பேண்டிலும் தீ பிடித்தது. ஹரிஷ் ரகுமான் உடனடியாக தீயை அணைத்து விட்டார். அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் அவருக்கு லேசான தீக்காயம் மட்டுமே ஏற்பட்டது. பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை.
இந்த செல்போன் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வாங்கப்பட்டது. இதையடுத்து அந்த இளைஞர் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். முதல் கட்ட சிகிச்சைக்கு பிறகு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சில வாரங்களுக்கு முன்பு கேரளாவில் கேம் விளையாடிக்கொண்டு இருந்தபோது செல்போன் வெடித்ததில் 8 வயது சிறுமி உயிரிழந்ததார்.
இந்த சம்பவம் அனைவர் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சென்னை வண்ணாரப்பேட்டையில் செல்போனில் சார்ஜ் செய்து கொண்டே பேசிய இளைஞர் மின்சாரம் தாக்கி அண்மையில் உயிரிழந்தார்.
இந்நிலையில் தற்போது அதே போன்ற சம்பவம் கேரளாவில் நிகழ்ந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எனவே மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியம்.
newstm.in