"பணவீக்கம் பற்றி விமர்சிக்க எதிர்க்கட்சிகளுக்கு உரிமை இல்லை!" – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சாடல்

கர்நாடகாவில் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கி பரபரப்பாக நடைபெற்று வருகிறது. தென்னிந்தியாவில் பா.ஜ.க ஆட்சியிலிருக்கும் ஒரே மாநிலம் காங்கிரஸ் என்பதால் தேர்தலில் தீவிர பிரசாரத்தை மேற்கொண்ட பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட நட்சத்திர பிரசாரகர்கள் காங்கிரஸைப் பிரிவினைவாதக் கட்சி என்று கடுமையாக விமர்சித்து பிரசாரம் மேற்கொண்டனர்.

காங்கிரஸ் Vs பாஜக – கர்நாடகா தேர்தல்

அதேபோல் கடந்த முறை கூட்டணி ஆட்சி அமைத்தும் பின்னர் ஆட்சி கவிழ்ந்ததால், இந்த முறை தனியாக வென்றே ஆகவேண்டும் என்ற முனைப்பில் களமிறங்கியிருக்கும் காங்கிரஸ், ஆளும் பாஜக அரசை `40 சதவிகித கமிஷன் அரசு’ என்று பிரசாரம் நெடுக முழங்கியது. கூடவே, விலைவாசி உயர்வு, பணவீக்கம், மதவாத மோதல்களுக்கு பா.ஜ.க தான் கரணம் என்று காங்கிரஸ் குற்றம்சாட்டி வந்தது. இந்த நிலையில், பணவீக்கத்தைப் பற்றிப் பேச எதிர்க்கட்சிகளுக்கு உரிமை இல்லை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சாடியிருக்கிறார்.

கர்நாடகாவில் இன்று வாக்களித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசுகையில் விலைவாசி உயர்வு, பணவீக்கம் குறித்த கேள்விக்குப் பதிலளித்த நிர்மலா சீதாராமன், “2014 முதல் இன்று வரை பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த மோடி அரசு தொடர்ந்துப் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கர்நாடகாவில் கூட பெட்ரோல் மீதான கலால் விகிதத்தை முதல்வர் பசவராஜ் பொம்மை இரண்டு முறை குறைத்தார்.

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்

பணவீக்கம் பிரச்னையில் நான் மக்களோடு நிற்கிறேன். பணவீக்கம் குறையவேண்டும்தான். ஆனால் அதை விமர்சனம் செய்ய எதிர்க்கட்சிகளுக்கு உரிமை இல்லை. அவர்கள் தங்களுடைய பதவிக்காலத்தைப் பார்க்கட்டும்” என்று மறைமுகமாக காங்கிரஸைச் சாடினார்.

இருப்பினும் இந்த தேர்தலில் பா.ஜ.க எத்தனை இடங்களில் வெற்றிபெறும் என்று எதிர்பார்க்கிறீர்கள் என்ற கேள்விக்கு நிர்மலா சீதாராமன் பதிலளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.