பிரித்தானிய உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள இலங்கைத் தமிழர்


பிரித்தானியாவில் சமீபத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் இலங்கைத் தமிழர் ஒருவர் வெற்றி பெற்றுள்ளார்.

ஆளும் கட்சியினர் தோல்விகளை சந்தித்துள்ள நிலையில் வெற்றி பெற்ற கவுன்சிலர்

பிரித்தானிய உள்ளாட்சித் தேர்தல்களைப் பொருத்தவரை, இம்முறை, ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி குறிப்பிடத்தக்க அளவில் தோல்விகளை சந்தித்துள்ளது.

ஆனாலும், தன்னை எதிர்த்து போட்டியிட்ட லேபர் கட்சி மற்றும் லிபரல் கட்சி வேட்பாளர்களை தோற்கடித்து அபார வெற்றி பெற்றுள்ளார் கன்சர்வேட்டிவ் கட்சி சார்பில் போட்டியிட்ட ஜெய்கணேஷ். 

பிரித்தானிய உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள இலங்கைத் தமிழர் | Srilankan Tamil Won The British Local Elections

யார் இந்த ஜெய்கணேஷ்?

இலங்கை, யாழ்ப்பாணத்தில் பிறந்த ஜெய்கணேஷ், லண்டன் மெட்ரோபாலிட்டன் பல்கலையில் சர்வதேச சுற்றுலா தொடர்பில் பட்டப்படிப்பு முடித்தவர் ஆவார்.

தனது வெற்றி குறித்து பேசிய ஜெய்கணேஷ், Sherborne St John மற்றும் Rooksdown பகுதியில் கன்சர்வேட்டிவ் கட்சி சார்பில் போட்டியிட்ட தன் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த மக்களுக்கு நன்றியைத் தெரிவித்துக்கொண்டார்.

பிரித்தானிய உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள இலங்கைத் தமிழர் | Srilankan Tamil Won The British Local Elections

மேலும், தான் வாழும் தொகுதியிலேயே தான் கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்டதை பெருமிதமாக கருதுவதாத தெரிவிக்கும் ஜெய்கணேஷ், தனக்கு வாக்களித்த மக்களின் நலனுக்காக அக்கறையுடன் செயல்பட இருப்பதாகவும், Basingstoke மற்றும் Deane நகர சபையின் முன்னேற்றத்திற்காக கடுமையாக உழைக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.