பிறந்தநாளை கொண்டாடிய பின் உயிரிழந்த குழந்தை! அவுஸ்திரேலியாவில் பெற்றோர்களுக்கு அவசர எச்சரிக்கை வெளியிட்ட தன்பாலின தந்தைகள்


அவுஸ்திரேலியாவில் தங்கள் ஒரு வயது குழந்தையை இழந்த தன் பாலின ஈர்ப்பாளர் தந்தைகள், பெற்றோர்களுக்கு ஒரு முக்கிய செய்தியை வெளியிட்டுள்ளனர்.

தன்பாலின தம்பதியின் குழந்தை

மெல்போர்னைச் சேர்ந்த லெய்க், ஜஸ்டின் க்ஹூ என்ற தன்பாலின ஈர்ப்பாளர்கள் வாடகைத் தாய் மூலமாக தங்களுக்கென குழந்தையை பெற்றெடுத்தனர்.

அந்த ஆண் குழந்தைக்கு ஓவன் என பெயரிட்டனர். ஓவன் 29 வாரங்களிலேயே 1.44 கிலோ எடையுடன் பிறந்தார். மேலும் அவர் பார்வை குறைபாட்டால் அவதிப்பட்டார்.

எனினும், ஓவனின் பெற்றோர் கவனிப்புடன் பார்த்துக் கொண்டனர். இந்த நிலையில் தான் ஒரு வயதை அடைந்த ஓவனுக்கு மூளைக்காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டது. இது தலை மற்றும் முதுகெலும்பு வீக்கத்தை ஏற்படுத்தும் கொடிய மற்றும் தொற்று நோயாகும்.

உயிரிழந்த குழந்தை

இதனால் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தை ஓவன், நான்கு கடினமான நாட்களுக்குப் பிறகு மார்ச் 17ஆம் திகதி இறந்தார்.

தனது முதல் பிறந்தநாளை கொண்டாடிய ஒரு வாரத்தில் குழந்தை இறந்தது பெற்றோரை வெகுவாக பாதித்தது.

இதனையடுத்து இருவரும் தங்கள் சமூக வலைத்தள பக்கத்தில், பெற்றோர்களாக இருக்கும் நபர்களுக்கு அவசர எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

பிறந்தநாளை கொண்டாடிய பின் உயிரிழந்த குழந்தை! அவுஸ்திரேலியாவில் பெற்றோர்களுக்கு அவசர எச்சரிக்கை வெளியிட்ட தன்பாலின தந்தைகள் | Melbourne Dads Lose Their Child Warning To Parents

பெற்றோர்களுக்கு அவசர எச்சரிக்கை

அவர்களின் பதிவில், அவுஸ்திரேலியாவில் இதுபோன்ற சம்பவங்கள் அதிகரித்து வருவதாக தம்பதி, குழந்தைகளுக்கு நோய் அறிகுறைகளை கண்டால் விழிப்புடன் இருக்குமாறு கூறியுள்ளனர்.

அத்துடன், ‘சில சமயங்களில் சிவப்பு அல்லது ஊதா நிற முள் புள்ளிகள் அல்லது சில நேரங்களில் பெரிய காயங்கள் போன்ற தோற்றமளிக்கும் டெல்-டேல் சொறி, எப்போதும் தோன்றாது.

எப்போதும் உங்கள் உள்ளுணர்வைப் பின்பற்றுங்கள், சந்தேகம் இருந்தால் தொழில்முறை உதவியை நாடுங்கள் மற்றும் உங்கள் குழந்தைகளுக்காக வாதிடுங்கள்’ என தெரிவித்துள்ளனர்.

மீண்டும் வாடகைத்தாய் குழந்தைக்கு திட்டம்

இந்த நிலையில் தங்கள் மகனின் நினைவாக, தன்பாலின தம்பதி மற்றொரு வாடகைக் குழந்தையை வளர்க்கும் நம்பிக்கையுடன் தங்கள் குடும்பத்தை மீண்டும் வளர்க்கத் திட்டமிட்டுள்ளனர்.

இதற்காக ஆகும் வாடகைத் தாய் ஏஜென்சி கட்டண சேவைகள், மருத்துவக் கட்டணங்கள், சட்டப்பூர்வ ஆவணங்கள் மற்றும் கர்ப்பம் தொடர்பான செலவுகளுக்காக நிதி திரட்டுகின்றனர்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.