மன்னர் சார்லஸ் மற்றும் கமிலாவை முந்திய இளவரசி டயானா: ட்வீட்டரை ஆக்கிரமித்த முடிசூட்டு விழா


பிரித்தானிய மன்னர் சார்லஸ் முடிசூட்டு விழாவில் போது இணையவாசிகள் மத்தியில் மன்னர் சார்லஸின் முன்னாள் மனைவி மற்றும் மக்கள் மனத்தின் ராணி என போற்றப்படும் டயானா அதிக அளவு நினைவு கூறப்பட்டுள்ளார்.

மன்னர் சார்லஸ், ராணி கமிலாவை முந்திய டயானா

முடிசூட்டு விழாவை முன்னிட்டு ட்விட்டர் முழுவதும் மன்னர் சார்லஸ் மற்றும் அவரது முடிசூட்டு விழா குறித்த தகவல்கள் மட்டுமே நாள் முழுவதும் நிறைந்து காணப்பட்டது.

பிரித்தானியாவின் இத்தகைய சிறப்புமிக்க நாளில் மன்னர் சார்லஸின் முன்னாள் மனைவி மற்றும் “மக்கள் மனத்தின் ராணி” என போற்றப்பட்ட டயானா பெரும்பாலான மக்களால் நினைவு கூறப்பட்டுள்ளார்.

சொல்லப்போனால், மறைந்த இளவரசி டயானா, முடிசூட்டிக் கொண்ட மன்னர் சார்லஸ் மற்றும் அவரது மனைவி கமிலாவை விட அதிக அளவு ட்வீட் செய்யப்பட்டுள்ளார்.
 

கடைசி நான்கு மணி நேரத்தை மட்டும் எடுத்துக் கொண்டால், மறைந்த இளவரசி டயானா பெயரில் குறைந்தபட்சம் 1,93,000 ட்வீட் செய்யப்பட்டுள்ளது.

144,000க்கும் குறைவான ட்வீட்டுகளில் மட்டுமே பிரித்தானிய ராணியாக முடிசூடிக் கொண்ட கமிலாவின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதே சமயம் பிரித்தானிய மன்னர் சார்லஸ் அவரது மறைந்த முன்னாள் மனைவி டயானா-வை விட மூன்று மடங்கு குறைவான பிரபலத்தையே சமூக ஊடகங்களில் பெற்று இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சார்லஸ்-டயானா பிரிவு

இளவரசர் சார்லஸுக்கும், 20 வயது இளம் பெண்ணாக இருந்த இளவரசி டயானாவுக்கும் 1981ம் ஆண்டு  திருமணம் நடைபெற்றது.
இவர்களுக்கும் வில்லியம் மற்றும் ஹரி என இரண்டு ஆண் குழந்தைகள் இருந்த நிலையில், 1996 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றுக் கொண்டனர்.

Princess DianaTwitter

அதற்கு அடுத்த வருடமே (1997) இளவரசி டயானா கார் விபத்தில் சிக்கி உயிரிழந்தார், அவரது உயிரிழப்பு ஒட்டுமொத்த உலகத்தையே சோகத்தில் ஆழ்த்தியது.

டயானாவால் உற்று நோக்கப்பட்ட இளவரசி சார்லோட் 

இதற்கிடையில் வேல்ஸ் இளவரசி சார்லோட் மற்றும் அவரது தாயார் இளவரசி கேட் மிடில்டன் டயானாவின் பழைய ஆபரணங்களை அணிந்து மன்னர் முடிசூட்டு விழாவில் கலந்து கொண்டதால், இணையவாசிகளால் அதிக அளவில் உற்று நோக்கப்பட்டனர். 

Princess Diana &Princess CharlotteTwitter



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.