மின்வாரிய ஊழியர்களுக்கு சம்பள உயர்வு..!! குட் நியூஸ் சொன்ன அமைச்சர் செந்தில் பாலாஜி..!!

மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களிடம் பேசியதாவது, “அதன்படி மின்வாரிய ஊழியர்களுக்கு 6 சதவீதம் ஊதிய உயர்வு வழங்க பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. ஊதிய உயர்வு வழங்குவதன் மூலம் ஆண்டுக்கு ரூ.527 கோடி அரசுக்கு கூடுதல் செலவாகும். ஊதிய உயர்வு மூலம் 75,978 ஊழியர்கள், பணியாளர்கள் பயன்பெறுவர்.

ஊழியர்களின் கோரிக்கைகள் அனைத்தும் அரசு சார்பில் ஏற்கப்பட்டு ஊதிய உயர்வு வழங்கப்பட்டுள்ளது. 2019 ஆம் ஆண்டு டிசம்பர் ஒன்றாம் தேதி முதல் 10 ஆண்டுகள் பணிமுடித்த ஊழியர்கள் மற்றும் அலுவலர்களுக்கும் 3 சதவீதம் ஊதிய உயர்வு வழங்கப்படும். ஊதிய உயர்வால் 2019 ஆம் ஆண்டு முதல் தர வேண்டிய நிலுவைத் தொகை 2 தவணைகளாக வழங்கப்படும்.” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.