லிங்காயத்து vs ஒக்கலிகா: கர்நாடக தேர்தலில் வெற்றியை தீர்மானிக்கும் தொகுதிகள்!

கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தல் இன்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. அரசியல் கட்சி தலைவர்கள், பிரபலங்கள், பொதுமக்கள் என பலதரப்பட்ட மக்களும் ஆர்வத்துடன் வந்து வாக்கு செலுத்தி வருகின்றனர். தேர்தல் என்றாலே சாதி ரீதியிலான வாக்கு வங்கி அரசியலை தவிர்க்க முடியாது. அந்த வகையில் கர்நாடக மாநிலத்தில் லிங்காயத்து, ஒக்கலிகா ஆகிய இரண்டும் செல்வாக்கு மிகுந்த சமூகங்களாக காணப்படுகின்றன.

கர்நாடக தேர்தல்

இதில் லிங்காயத்து சமூகத்தினர் கர்நாடக மக்கள்தொகையில் 17 சதவீதம் பேர் உள்ளனர். மொத்தமுள்ள 224 தொகுதிகளில் 100 தொகுதிகளுக்கும் மேல் லிங்காயத்துகளின் ஆதிக்கம் இருக்கிறது. முன்னாள் முதல்வரும், பாஜக மூத்த தலைவருமான எடியூரப்பா லிங்காயத்து சமூகத்தை சேர்ந்தவர். கடந்த 2019 மக்களவை தேர்தலில் பாஜக 24 தொகுதிகளை (மொத்தம் 28 மக்களவை தொகுதிகள்) கைப்பற்ற லிங்காயத்து சமூகத்தின் ஆதரவு பெரிதும் கைகொடுத்தது.

ஒக்கலிகா வாக்குகள்

இதேபோல் கர்நாடக மக்கள்தொகையில் 11 சதவீதம் ஒக்கலிகா மக்கள் இருக்கின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் மதச்சார்பற்ற ஜனதா தளத்திற்கு ஆதரவாக நிற்கின்றனர். சில சமயங்களில்
காங்கிரஸ்
கட்சிக்கும் ஆதரவாக நிற்பர். இவர்களின் தாக்கம் கடந்த 2018 சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக வெளிப்பட்டதை தொகுதி வாரியான வெற்றியை வைத்து பார்க்க முடிந்தது.

வாக்குப்பதிவு நாளான இன்று (மே 10) மேற்குறிப்பிட்ட இரண்டு சமூக மக்கள் அதிகம் வசிக்கும் தொகுதிகளில் மக்களின் ஆர்வம், அரசியல் கட்சிகளுக்கான ஆதரவு, வெற்றியை தீர்மானிக்கும் விஷயங்கள், வேட்பாளர்கள் உள்ளிட்டவை மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றன.

வ.எண்லிங்காயத்து சமூகம் அதிகமுள்ள தொகுதிகள்1ஷிகோவன்2வருனா3ஷிகாரிபூரா4சிக்கமகளூரு
வ.எண்ஒக்கலிகா சமூகம் அதிகமுள்ள தொகுதிகள்1ஹனூர்2படாமி3குண்டுலுபேட்4கனகபூரா

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.