வங்கக்கடல் அருகே உருவாகி வரும் மோக்கா புயல் வெள்ளிக்கிழமை (12 ஆம் திகதி) தீவிர புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் தெற்கு அந்தமான் கடல் பகுதியில் ஏற்கனவே குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பல பகுதிகளுக்கு எச்சரிக்கை
இதனால், ஒடிசா, மேற்கு வங்கம் உள்ளிட்ட இந்தியாவின் கிழக்கு மாநிலங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளன.
இந்திய வானிலை ஆய்வு மையத்தின்படி, மோக்கா புயல் வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்புள்ளது.
இந்த புயல் வெள்ளிக்கிழமை வங்கதேசம் மற்றும் மியான்மர் கடற்கரையை நோக்கி நகரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.