கரூர் வைகாசி மாத பெருவிழாவை முன்னிட்டு மே 31ஆம் தேதி கரூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டங்களிலும் சிறப்பு பண்டிகைகள், கோவில் திருவிழாக்கள் மற்றும் சுதந்திரப் போராட்ட வீரர்களின் நினைவு தினங்கள் உள்ளிட்ட முக்கிய தினங்களை முன்னிட்டு அந்தந்த மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் வரும் மே 31ம் தேதி கரூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள மாரியம்மன் திருக்கோயிலில் ஒவ்வொரு வருடமும் தமிழ் மாதமான வைகாசியில் வைகாசி திருவிழா விமரிசியாக நடைபெறும்.
இந்த ஆண்டு மே 14ஆம் தேதி வைகாசி பெருவிழா தொடங்க உள்ளது. இந்த விழாவில் முக்கிய நிகழ்ச்சியான கம்பம் ஆற்றிற்கு செல்லும் நிகழ்ச்சி மே 31ஆம் தேதி நடைபெற உள்ளது. அதன் காரணமாக மே 31ஆம் தேதி கரூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.