நியூயார்க்:
உலக அளவில் கோடிக்கணக்கானோர் அன்றாடம் பயன்படுத்தி வரும் வாட்ஸ் அப் நம்மை ஒட்டுக்கேட்கிறது என்று சொன்னால் திடுக் என்றுதானே இருக்கும். அப்படி ஒரு குற்றச்சாட்டுதான் தற்போது வைக்கப்பட்டிருக்கிறது. இந்த புகாரை எழுப்பிய நபரும் சாதாரண ஆள் கிடையாது.. ட்விட்டர் நிறுவனத்தில் உயர் பொறுப்பில் இருக்கும் பொறியாளர்தான் இதை கூறி இருக்கிறார்.
ட்விட்டரின் லோகோவை மாற்றிய எலான் மஸ்க்… பயனர்கள் அதிர்ச்சி!
இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள்
இந்த சூழலில், ட்விட்டர் தலைவர் எலான் மஸ்க்கும் இதை ஆமோதிக்கும் வகையில் கருத்து தெரிவித்துள்ளதுதான் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் பூதாகரமானதை ்அடுத்து இதுகுறித்து விசாரிப்பதாக வாட்ஸ் அப் நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் மக்கள் மத்தியில் ஒரு பரபரப்பான பேச்சு இருந்ததை நாம் கேள்விப்பட்டிருப்போம். நாம் எதை பற்றி பேசுகிறோமோ, அந்த விஷயம் தொடர்பாக கூகுளிலும், ஃபேஸ்புக்கிலும் விளம்பரங்கள் காட்டப்படுகின்றன என்பதுதான் அது. உதாரணமாக, நாம் புதிய ஏசி ஒன்றை வாங்க வேண்டும் என்ற ரீதியில் பேசி இருந்தால், அடுத்த சில தினங்களில் ஏசி தொடர்பான விளம்பரங்கள் வரும்.
ஒட்டுக்கேட்டதா பேஸ்புக்?
கிட்டத்தட்ட நிறைய பேர் இதை அனுபவத்திருப்போம். இது முதலில் அதிசயமாக இருந்தது. பிறகு, பேஸ்புக்கில் மைக்ரோஃபோன் (Microphone) என்ற ஆப்ஷன் இருப்பதும், அது நாம் பேசும் சில ஆங்கில வார்ததைகளை கிரகித்துக் கொண்டு அதுதொடர்பான விளம்பரங்களை காட்டுகிறது என தொழில்நுட்ப வல்லுநர்கள் விளக்கம் அளித்தனர். இதன் தொடர்ச்சியாக, பலர் இந்த மைக்ரோஃபோன் ஆப்ஷனை ஆஃப் செய்தனர்.
“வாட்ஸ் அப் என்னை ஒட்டுக்கேட்கிறது”:
இந்த சூழலில்தான், வாட்ஸ் அப்பும் இதுபோல மக்களை ஒட்டுக்கேட்பதாக ட்விட்டர் நிறுவனத்தில் பொறியாளராக பணிபுரியும் ஃபோட் டாபிரி என்பவர் திடீர் குற்றச்சாட்டை வைத்துள்ளார். இதுதான் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் கூறுகையில், “வாட்ஸ் அப் நான் தூங்கும் போதும் கூட மைக்ரோஃபோனை பயன்படுத்துகிறது. அதாவது நான் இரவு தூங்கியது முதல் அதிகாலை 6 மணி வரை எனது வாட்ஸ் அப்பில் மைக்ரோஃபோன் பயன்பாட்டில் இருக்கிறது. என்ன நடக்கிறது?” எனக் கேள்வியெழுப்பி உள்ளார்.
பகீர் ஸ்கிரீன்ஷாட்:
மேலும், இதுதொடர்பான ஸ்கிரீன்ஷாட்டையும் அவர் பகிர்ந்திருக்கிறார். அதில் அவர் தூங்கிக் கொண்டிருந்த போது, அதிகாலை 4.22 மணி முதல் 4.55 மணி வரை அவரது வாட்ஸ் அப்பில் உள்ள மைக்ரோஃபோன் தானாக ON ஆகியுள்ளதை பார்க்க முடிகிறது. இதுதான் தற்போது பெரும் பேசுபொருளாக மாறி இருக்கிறது. உண்மையில், இது சாதாரண விஷயம் இல்லை என்றே தோன்றுகிறது. ஏனெனில் பேஸ்புக், கூகுள் ஆகியவையாவது விளம்பரங்களை காட்டும் நிறுவனங்கள். அது அந்த மைக்ரோஃபோன் ஆப்ஷனை பயன்படுத்தியதை ஓரளவுக்காவது ஏற்றுக்கொள்ள முடியும்.
எலான் மஸ்க்:
ஆனால், வாட்ஸ் அப் என்பது தனிப்பட்ட தேவைக்காக உபயோகப்படுதப்படும் ஒரு செயலி. வாட்ஸ் அப்பில் யாருடனாவது பேசும் போதோ அல்லது குரல் பதிவு (Voice Message) அனுப்பும் போதுதான் அதில் உள்ள மைக்ரோஃபோன் ON ஆக வேண்டும். மற்ற நேரங்களில் அது செயல்பாட்டில் இருக்காது. இருக்கவும் கூடாது. அதுதான் settings.ஆனால், நாம் தூங்கும்போது கூட தானாகவே வாட்ஸ் மைக்ரோஃபோன் ஆன் ஆவது ஒருவித அச்சத்தையும், நெருடலையும் தருகிறது. இந்நிலையில், ட்விட்டர் தலைவர் எலான் மஸ்க், ஃபோட் டாபிரியின் ஸ்கிரீன்ஷாட்டை பதிவிட்டு, “வாட்ஸ் அப் நம்பத்தகுந்தது அல்ல” (Whatapp cannot be trusted) எனக் கூறியிருக்கிறார்.
வாட்ஸ் அப் விளக்கம்:
இதனிடையே, இந்த விவகாரம் குறித்து வாட்ஸ் அப் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. அதில், “சம்பந்தப்பட்ட ட்விட்டர் பொறியாளர் டாப்ரியிடம் 24 மணிநேரத்துக்கும் மேலாக பேசி வருகிறோம். எங்களுக்கு தெரிந்தவரை அது வாட்ஸ் அப்பில் இருக்கும் பிரச்சினை இல்லை. அவரது ஆன்ட்ராய்டு போனில் தான் பிரச்சினை இருப்பதாக தெரிகிறது. இதுகுறித்து விசாரித்து வருகிறோம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.